‛மெர்சலா போயிட்டு இருக்கிற ப்ரெண்ட்ஷிப்பில் எதற்கு விரிசல்?’ - விஜய் நட்பு குறித்து சஞ்சீவ் சொன்ன சீக்ரெட்!

‛‛அதெல்லாம் ஒன்னும் கேட்க வேண்டாம்... அந்த படத்தில் என்னை தளபதினு கூப்பிடுறாங்க... அதனால அப்படி வெச்சிருப்பாங்க... அதெல்லாம் கேட்க வேண்டாம்... விட்ரு...’ என்றார். நானும் அதன் பின் கேட்கவில்லை’’

Continues below advertisement

நடிகரும், பிக்பாஸ் போட்டியாளரும், தளபதி விஜய்க்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவரான சஞ்சீவ், சில ஆண்டுகளுக்கு முன் சாமி 2 ரிலீஸ் போது, இணையதளத்திற்கு அளித்த பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த பேட்டி...

Continues below advertisement


‛ஏன் நீங்க விஜய் படத்துல நடிக்கல... குளோஸ் ப்ரெண்ட்னு சொல்றீங்க... ஏன் விஜய் கூட நீங்க நடிக்கல.. முதலில் இரண்டு , மூன்று படங்கள்ல நடிச்சீங்க...’ இப்போ ஏன் பண்ணல, என கேட்குறாங்க, எங்க நண்பர்கள் 6 பேருக்கு ஒரு பாலிசி இருக்கு, உன் வேலையை நீ பாரு, என் வேலையை நான் பாக்றேனு முடிவு பண்ணோம் பர்சனலா ஏதாவது பிரச்சனையா இருந்த சொல்லுங்க உதவிக்கலாம்... ஃப்ரெபஷனல் பிரச்சனையை அவங்க அவங்க தான் பார்த்துக்கணும்னு நாங்க ஆரம்பத்துலயே முடிவு பண்ணிட்டோம். யாரும் யாருட்டையும் வந்து நிற்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம். நிதி பிரச்சனைகள் இருந்தால், விஜய் பண்ணுவார். எனக்கு ஒரு சிரமம் இருப்பது தெரிந்தாலே, விஜய் வந்து உதவி பண்ணுவார். 


நிறைய இயக்குனர்கள் எங்களிடம் வந்து கேட்பார்கள். விஜய் சார்ட்ட கதை சொல்லனும், ஹெல்ப் பண்ணுங்கனு. அவருக்குனே ஒரு ஸ்கிரிப்ட் எழுதிருக்கேன் சார்... அவரிடம் அப்பாயின்மெண்ட் வாங்கித் தாங்கனு வந்து நிப்பாங்க. நாங்க யாருமே அந்த தவறை செய்ய மாட்டோம். ‛மெர்சலா போயிட்டு இருக்கிற ப்ரெண்ட்ஷிப்பில் எதற்கு விரிசல்’. மெர்சல் ஆடியோ பங்சனில் மேடை ஏறும் முன்பாக அவருக்கு போன் செய்தேன், ‛தளபதினு சொல்ல சொல்றாங்க... இளைய தளபதியில் இருந்து தளபதினு சொல்ல என்ன காரணம்னு... நான் மேடையில் கேட்கட்டுமா?’ என்று விஜய்யிட் கேட்டேன். அதெல்லாம் ஒன்னும் இல்லையே... அதெல்லாம் ஒன்னும் கேட்க வேண்டாம்... அந்த படத்தில் என்னை தளபதினு கூப்பிடுறாங்க... அதனால அப்படி வெச்சிருப்பாங்க... அதெல்லாம் கேட்க வேண்டாம்... விட்ரு...’ என்றார். நானும் அதன் பின் கேட்கவில்லை. இளைய தளபதிங்கிறது கூட அவர வெச்சாரு... எல்லாம் தானா வர்றது தான. இப்போ வரை எனக்கும் ஏன் அது மாறியதுனு தெரியாது. 


ஹரி சார் கூட சாமி 2 ல் நடித்தது பரபரப்பானது. அவரே பரபரப்பானவர். கொளுத்தும் வெயிலில் ராஜஸ்தான் ஜெய்சால்மரில் கொதிக்கும் வெயிலில் சூட்டிங் நடந்தது. எப்போ ஷாட் முடியும், எப்போ கேரவேன் போலாம்னு நாங்க காத்திருப்போம். நாங்க போயிட்டு, சாப்பிட்டு டைரக்டர் எங்கேனு பார்த்தா, தூரத்தில் சூட்டிங் ஸ்பாட் டெண்ட்ல உட்கார்ந்து கொளுத்தும் வெயிலில் சாப்பிட்டுட்டு இருப்பார். அங்கிருந்து வந்தா, நேரம் போயிடும்னு அங்கேயே சாப்பிட்டு, டிஸ்கஸ் பண்ணிட்டு அப்படியே வேலையை தொடர்வாரு. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola