ஜேசன் சஞ்சய்
நடிகை விஜயைத் தொடர்ந்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் திரைத்துறையில் அடியெடுத்து வைக்க இருக்கிறார். கனடாமில் திரைப்பட இயக்கம் பயின்றுள்ள ஜேசன் லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு நேற்று நவம்பர் 29 ஆம் தேதி வெளியானது. மாநகரம் , மைக்கல் , கேப்டன் மில்லர் ராயந் உள்ளிட்ட படங்களில் நடித்த சந்தீப் கிஷன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பை கையாள்கிறார். இப்படம் குறித்த கூடுதல் தகவல்களை நடிகர் சந்தீப் கிஷன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஜனவரியில் படப்பிடிப்பு
" ஜேசன் சஞ்சயும் நானும் ராயன் படத்தின் ரிலீஸூக்கு முன்பிருந்தே பேசி இந்த படத்தில் இணைந்து பணியாற்ற முடிவு செய்தோம். இந்த படம் நிறைய ஃபன் மற்றும் ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் . ஜேசன் எனக்கு இடைவெளியே இல்லாமல் 50 நிமிடம் கதை சொன்னார். அவர் இந்த கதைக்கு செலுத்தியிருக்கும் உழைப்பைப் பார்த்து நான் மிரண்டுவிட்டேன். இந்த படத்திற்கு பான் இந்திய அளவில் வரவேற்பு இருக்கும். ஜேசனின் கனவு படத்தில் அவருக்கு துணையாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறென். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது" என சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்"