கமல்ஹாசன்


கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் தனித்த அடையாளமாக திகழ்பவர் கமல்ஹாசன் . நடிப்பு , இயக்கம் , நடனம் , பாடகர் என சினிமாவில் உள்ள அத்தனை பிரிவுகளின் கீழும் பணியாற்றியிருக்கிறார். பணியாற்றியது மட்டுமில்லாமல் தனது ஒவ்வொரு படத்தின் மூலமும் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தன்னை இன்னும் சினிமாவில் மாணவனாகவே கருகிறார் கமல் . ஆனால் ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே அவர் ஒரு மாஸ்டர் தான். தனது ஐந்து வயதில் இருந்து நடிக்கத் தொடங்கிய கமல் நடிப்பில் பி.எச்..டி முடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். கமலின் நடிப்பை பலர் ரசிக்கவும் பாராட்டவும் செய்தாலும் கமல் ஏன் ஒரு மாஸ்டர் என்பதற்கு உதாரணமாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


கலிஃபோர்னியாவின் பெர்க்லீ பல்கலைகழகத்தின் படி மொத்தம் 27 விதமான உணர்ச்சிகள் இருக்கின்றன. மகிழ்ச்சி , உற்சாகம் , சோகம் , நிறைவு , பயம் , குழப்பம் என மொத்த 27 விதமான உணர்ச்சிகளையும் கமல் தனது படங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். அடுத்தடுத்து கமலின் ஒவ்வொரு படங்களின் காட்சிகளை பார்க்கும்போது ஒவ்வொரு உணர்ச்சிக்கும் எவ்வளவு நுணுக்கமான வித்தியாசங்களை கமல் காட்டியிருக்கிறார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்




தற்போது கமல் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிலம்பரசன் , அசோக் செல்வன் , அபிராமி , த்ரிஷா , ஜோஜூ ஜார்ஜ் , ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தக் லைஃப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.