Salman Khan : தலைவருக்கு வயசாகிடுச்சு... சோஃபாவில் இருந்து எழுந்திருக்க திணறிய சல்மான் கான்..வருந்திய ரசிகர்கள்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சல்மான் கான் சோஃபாவில் இருந்து எழுந்திருக்க சிரமப்பட்ட வீடியோ வைரலாகிய நிலையில் சல்மான் கான் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

Continues below advertisement

சல்மான் கான்

நாம் சின்ன வயதில் இருந்து பார்த்து ரசித்து வந்த நடிகர்களுக்கு வயதாவதை பார்ப்பது என்பது மிக வருத்தமான ஒரு நிகழ்வுதான். ரஜினி , கமல் போன்ற மூத்த நடிகர்கள் தங்கள் வயதையும் கடந்து திரைப்படங்களின் வழியாக நம்மை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஒரு நாள் தங்களது வயதின் காரணமாக அவர்கள் சினிமாவை விட்டு விலகி இருக்க வேண்டிய சூழல் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரசிகர்களுக்கு அப்படியான ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது. சினிமாவை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் கைக்குள் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். ஷாருக் கானுக்கு நிகரான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். சல்மான் கானிடம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த அம்சம் என்று அவரது ஃபிட்னஸை சொல்லலாம். எப்படியான கதாபாத்திரத்தில் நடித்தாலும் சல்மான் கானின் உடல் மட்டும் ஒரே மாதிரியான கம்பீரத்தில் இருப்பதை பார்க்கலாம். அப்படி தாங்கள் பார்த்து பார்த்து ரசித்த நடிகருக்கு வயதாகிவிட்டது என்பதை ரசிகர்கள் உணர்ந்துகொள்ளும் விதமாக சமீபத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 

Continues below advertisement

சோஃபாவிலிருந்து எழுந்திருக்க திணறிய சல்மான் கான்

சமீபத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சல்மான் கான் பேசுவதற்காக எழுந்திருக்க முயன்றார். அப்போது அவர் சோஃபாவில் இருந்து எழுந்திருக்க சிரமப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைப் பார்த்த சல்மான் கானின் ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகருக்கு வயதாகிவிட்டதை நினைத்து வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். 

சிகந்தர்

சல்மான் கான் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிகந்தர் படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. 


மேலும் படிக்க : Jayam ravi : இனிமேல் சோலோதான்... இன்ஸ்டாகிராமில் ஒன்று விடாமல் குடும்ப புகைப்படங்களை டிலீட் செய்த ஜெயம் ரவி

S P Balasubramaniam : எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் என தெருவின் பெயரை மாற்ற வேண்டும்..முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் எஸ்.பி.பி மகன் கோரிக்கை

Continues below advertisement
Sponsored Links by Taboola