பூனை புஷிக்கு நடத்திய தடல் புடலான  வளைகாப்பு விழா - எங்கு தெரியுமா?

விலங்கினங்கள் மீது வெறுப்பு ஏற்படாமல் அவைகளையும் நம்மளோட ஒருவராக பாதுகாத்திட வேண்டும். இனம் அழிந்து விட கூடாது  என்ற நோக்கத்துடன் இந்த வளைகாப்பு விழாவானது நடைபெற்றது.

Continues below advertisement

திண்டுக்கல்லில் செல்லப் பிராணியான பூனைக்கு 11-ஆம் வகுப்பு மாணவி நடத்திய தடல் புடலான வளைகாப்பு விழாவில் உற்றார்,  உறவினர்கள் பங்கேற்று ஆசிர்வதித்தனர்.

Continues below advertisement

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் தாய்  கமலா தந்தை  சின்னச்சாமி தம்பதியினரின் மகள் லட்சுமி பிரியதர்ஷினி. இவர் தனியார் பள்ளியில்  11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது வீட்டில் புஷி என்ற பூனையை 1 1/2  ஆண்டு காலமாக செல்லமாக வளர்த்து வருகின்றனர். இந்த பூனையானது தற்பொழுது கருவுற்று உள்ள நிலையில் இந்த பூனைக்கு வளைகாப்பு நடத்தப்பட வேண்டும் என லட்சுமி பிரியதர்ஷினி முடிவு செய்துள்ளார்.

Tirupati Laddu: லட்டு சர்ச்சை! திருப்பதியில் தோஷத்தைப் போக்க தொடங்கியது சாந்தி ஹோமம்!


பின்பு தனது பெற்றோர், சகோதரிகள் உற்றார் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து செல்லப் பிராணியான பூனை புஷிக்கு வளைகாப்பு விழாவானது நடைபெற்றது. இந்த வளைகாப்பு விழாவில் ஒரு பெண் தாயுற்று வளைகாப்பு விழா நடத்தப்படுவது போல் ஒற்றை வரிசையில் சீர்வரிசைகள் செய்து பூனைக்கு புது ஆடை அணிந்து, வளையல் அணிவித்து, சந்தன குங்குமம் நெற்றியிலிட்டு, பூ  தூவி செல்ல பிராணியான பூனைக்குட்டிக்கு சாக்லேட் போன்ற உணவுகள் கொடுத்து வெகு விமர்சையாக தடல் புடலாக நடைபெற்ற வளைகாப்பு விழாவில்  உற்றார், உறவினர்கள் வளைகாப்பு செய்து வைத்து ஆசிர்வாதம் செய்தனர். 

Nalla Neram Today Sep 23: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?

மேலும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி லட்சுமி பிரியங்கா கூறுகையில், சமூகத்தில் இன்று விலங்கினங்கள் மீது பாசம் என்பது குறைந்து வெறுப்பு என்பது அதிகரித்து  வருகிறது. அப்படியே நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை நம்முடைய சுய லாபத்திற்காகவே வளர்த்து பயனடைந்து வருகிறோம். ஆனால் அந்த செல்லப்பிராணியானது நம்மை சந்தோஷமாகவும்  ஆபத்தான காலங்களில் நம்மை காப்பாற்றவும் செய்கிறது .


நாம் அதையெல்லாம் மறந்துவிட்டு நம்மை சந்தோஷப்படுத்த கூடிய செல்லப்பிராணிகளை கண்டுகொள்ளப்படுவது இல்லை. நம்மை சந்தோஷப்படுத்தக்கூடிய இந்த பிராணிகளுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு அவைகளையும் சந்தோசப்படுத்த வேண்டும்.  இந்த நிகழ்ச்சியானது ஏன்  நடத்தப்பட்டது என்றால்  விலங்கினங்கள் மீது வெறுப்பு ஏற்படாமல் அவைகளையும் நம்மளோட ஒருவராக இருந்து  சந்தோஷப்படுத்தக்கூடிய ஜீவனை பாதுகாத்திட வேண்டும் இனம் அழிந்து விட கூடாது  என்ற நோக்கத்துடன் இந்த வளைகாப்பு விழாவானது நடைபெற்றது என்று கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola