பிக் பாஸ் சீசன் -8 நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க்கில்  யார் வெற்றி பெற்றாரா? பணப்பெட்டியை முத்துக்குமரன் எடுத்தாரா? என வெளியாகியிருக்கும் ப்ரோமோ ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. 


பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. 100- நாட்களைக் கடந்துள்ள நிகழ்ச்சியில் வெற்றி பெறபோவது யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் சீசன் நிறைவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், போட்டியாளர்கள் செயல்பாடுகள் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்க்கில் யார் வெற்றி பெறுவார்கள்? யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது.





 


பிக் பாஸ் வீட்டில் முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ராயன் ஆகிய பேர் இறுதிக்கட்ட போட்டியில் உள்ளனர். 


இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் வைக்கப்படும் தொகை தொடர்ந்து அதிகரிக்கப்படும் வழக்கமாக பெட்டியை எடுப்பவர் பணத்தை எடுத்துகொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார். இதுவே இதுவரையிலான நிகழ்ச்சியில் இருந்த நடைமுறை. ஆனால், இந்த முறை ஓர் அறைக்குள் வைக்கப்பட்டிருக்கும் பணப்பெட்டியை எடுப்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வந்துவிட்டால் போட்டியை தொடரலாம் என்ரு நேரத்தைத் தவரவிட்டல பிக பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்ற விதிமுறை பின்பற்ற உள்ளது. 






ஒவ்வொரு ரவுண்ட் இருப்பதாக ப்ரோவில் காட்டப்பட்டுள்ளது.  முதல் பணப்பெட்டி போட்டியில் 30 மீட்டர் தொலைவில் ரூ.50,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 15 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. இந்த முறை முத்துக்குமரன் பணப்பெட்டியை எடுக்க முயற்சி செய்வதாக ப்ரோமோவில் கொடுக்கப்பட்டுள்ளது.


இரண்டாம் பணப்பெட்டியில், 45 மீட்டர் தொலைவில் ரூ.2,00,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 25 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. 


அடுத்த ரவுண்டில் பணப்பெட்டியில், 60 மீட்டர் தொலைவில் ரூ.5,00,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 30 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. அடுத்த ரவுண்டில் பணப்பெட்டியில், 45 மீட்டர் தொலைவில் ரூ.2,00,000 பணம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை 25 விநாடிகளில் எடுக்க வேண்டும் அறிவிக்கப்பட்டது. இதை எடுக்க முத்துக்குமரன், வி.ஜே. விஷால், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ராயன் ஆகிய போட்டியாளர்கள் பணப்பெட்டியை எடுக்க முயற்சி எடுக்கின்றனர். அது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் விஜய் தொலைக்காட்சி எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. 






பணப்பெட்டியை எடுத்தும் டாஸ்க்கில் முத்துக்குமரன் ரூ.50,000 தொகையை எடுத்து வீடு திரும்பிகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், முத்துக்குமரன் இறுதிச்சுற்றுக்கு தன் இடத்தை தக்கவைத்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது. ஜாக்குலின் வெளியேறினார் என்று சொல்லப்படுகிறது. 



இன்று இரவு ஒளிப்பரப்பாகும் பிக் பாக்ஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்று தெரியும். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ‘மா.கா.பா. ஆனந்த்’ இருக்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.