ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியானப் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரண்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன், சத்யன், சஞ்சனா நடராஜன்,  நவீன் சந்திரா, இளவரசு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து   ஸ்டோன் பெஞ்சு ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 


ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வசூலை குவித்து வரும் ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் ராகவா லாரண்ஸ், எஸ் ஜே சூர்யா , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நவீன் சந்திரா  மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கிருபையாக நடித்த எஸ். ஜே சூர்யா பேசினார்.


ஆடியன்ஸ் முன்னேறிட்டாங்க


” ஜிகர்தண்டா படத்தை நாங்கள் கோயம்புத்தூர், மதுரை , திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று சேர்ந்து பார்த்தோம். பொதுவாக ஒரு படத்தில் ஒரு ஆக்‌ஷன் சீன் வந்தால் அதற்கு ரசிகரகள் கைதட்டுவார்கள் அதே போல் ஒரு பாடல் வந்தால் அதற்கு ரசிகர்கள் கைதட்டுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் வரும் எமோஷனலான காட்சிகளுக்கு கூட ரசிகர்கள் கைதட்டினார்கள். இப்படி ஒரு புதுமையான ஒரு படத்திற்கு ரசிகர்கள் இவ்வளவு ஆதரவு கொடுப்பதை பார்த்தால் ரசிகர்கள் ரொம்பவே முன்னேறிவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும்.” என்று அவர் பேசினார்


நாம பேசக்கூடாது நம்ம படம் பேசனும்


” இந்தப் படத்திற்காக நிறைய இடங்களில் பத்திரிகையாளர்களை சந்தித்தோம். ராகவா லாரண்ஸ் படம் பற்றி ஏதாவது பேச வரும்போது எல்லாம் இயக்குநர் எங்களை எதுவும் சொல்லாதீங்க என்று தடுத்துவிடுவார்.  கார்த்திக் சுப்பாராஜ் ஒன்றை மிக உண்மையாக நம்புபவர். அதாவது நாங்கள் இவ்வளவு நல்ல ஒரு படத்தை இயக்கியிருக்கிறோம் என்று நாம் பேசுவதை விட நம் படம்தான் பேச வேண்டும் என்பது. அந்த வகையில் இந்தப் படம் ரொம்ப சிறப்பாகவே மக்களிடம் பேசியிருக்கிறது.” என்று எஸ் ஜே சூர்யா கூறினார்.


பொதுவாக ஒரு சிலப் படங்களுக்கு முதல் முன்று நாளில் ஒரு படம் நன்றாக நல்லா ஓடும் அதற்கு பிறகு வார நாட்களில் படத்திற்கு கூட்டம் குறைந்துவிடும். ஆனால்  ஜிகர்தண்டா படத்திற்கு வார நாட்களில் கூட திரையரங்குகள் கிட்டதட்ட 80 சதவீதம் கூட்டம் வருகிறது.


இந்தப் படம் ஒரு மைல் கல்


கார்த்திக் சுப்பராஜ் இறைவி என்கிற படத்தை எனக்கு கொடுத்து என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கேட்டை திறந்துவிட்டார். அதே மாதிரி இந்தப் படத்திலும் எனக்கு மைல் கல்லாக கொடுத்திருக்கிறார். என் வாழ்க்கையில் இரண்டு முக்கியமானப் படங்களைக் எனக்கு கொடுத்த கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்று எஸ் ஜே சூர்யா தெரிவித்தார்.