காந்தாரா


கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் தேதி வெளியான கன்னட மொழித் திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தை இயக்கி நடித்திருந்தார். காந்தாரா திரைப்படம் வெளியான சில நாட்களில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதன் காரணத்தால் அது இந்தி , தமிழ் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. வெறும் 16 கோடி செலவில் எடுக்கப் பட்ட இந்தத் திரைப்படம் இந்தியா முழுவதும் மொத்தம் 400 கோடி ரூபாய் வசூல் சேர்த்தது. மேலும் அதிக வருவாய் ஈட்டிய கன்னட மொழித் திரைப்படங்களில் கே. ஜி. எஃப் திரைப்படத்திற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது காந்தாரா. இந்தப் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்ட விழாவில் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை தான் எழுதி வருவதாகவும் கூடுதலான தகவலை விரைவில் தெரிவிப்பார் எனவும் தெரிவித்திருந்தார்.


காந்தாரா 2


தற்போது காந்தாரா இரண்டாம் பாகத்திற்காக திரைக்கதையை ரிஷப் ஷெட்டி எழுதி முடித்து விட்டதாகவும் வரும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி இந்தப் படத்திற்கான பூஜை நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்புத் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகம் 16 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டாம் பாகம் சுமார் 100 கோடி பட்ஜட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப் பட இருப்பதாக தெரியவந்துள்ளது.


முதல் பாகத்தில் சிறிய பகுதியாக இடம்பெறும் வரலாற்றுக் கதையை தீவிரமாக ஆராய்ச்சி செய்து முழு நீளப் படமாக ரிஷப் ஷெட்டி இயக்க இருக்கிறார். கி.பி. 300 முதல் கி.பி 400 காலக்கட்டத்தில் இந்தப் படத்தின் கதை நடைபெறுவதாக கூறப்படுகிறது.


 நடிகர்கள்


இந்த படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரமாக நடித்தவர் ரிஷப் ஷெட்டி. கதாநாயகியாக சப்தமி கெளடா நடித்திருந்தார். மேலும் அச்யுத் குமார், ப்ரமோத் ஷெட்டி கிஷோர் ஆகியவர் நடித்திருந்தனர்  மேலும் இந்த முறை  தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இருந்து மிகப்பெரிய ஸ்டார்கள் இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.. காந்தாரா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்தப் பேச்சு எழுந்தபோது படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி அதை மறுத்துவிட்டார். ஏற்கனவே ஹிந்தியில் டப் செய்யப் பட்டிருப்பதாலும் ரீமேக் செய்வதில் தனக்கு உடன்பாடில்லை எனத் ரிஷப் ஷெட்டி தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.