Genie First Look: அற்புத விளக்கில் இருந்து ஜீனியாக வந்த ஜெயம் ரவி! ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

ஜெயம் ரவித்து நடித்து வரும் ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஜெயம் ரவி

பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்து நடிகராக அடுத்தக் கட்டத்திற்கு சென்றவர் ஜெயம் ரவி. காமெடி, த்ரில்லர், ரொமான்ஸ்  என என்னா ஜானர் படங்களிலும் கச்சிதமாக பொருந்தி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துபவர். ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் நடித்து வெளியானப் படம் சைரன். இப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்க இருந்த படம் தக் லஃப்

Continues below advertisement

கமல்ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான், த்ரிஷா, ஐஷ்வர்யா லெக்‌ஷ்மி , ஜெயம் ரவி, ஜோஜூ ஜார்ஜ்  உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சைபீரியாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருந்த நிலையில் தேர்தல் பணிகளில் கமல்ஹாசன் பிஸியாகி விட்டார். இதன் காரணத்தினால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.  இதன் காரணத்தினால் இந்தப் படத்தில் இருந்து ஜெயம் ரவி இந்தப் படத்தில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க இருந்த  நடிகர் துல்கர் சல்மானும் இந்தப் படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியானது.

ஜீனி

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது  உருவாகி வரும் படம் ஜீனி. அர்ஜூனன் ஜூனியர் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷினி மற்றும் வமிகா கப்பி உள்ளிட்ட நடிகைகள் நடிக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola