Rashmika Mandanna Deep Fake Video: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
ராஷ்மிகா மந்தனா:
தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, பாலிவுட்டிலும் அறிமுகமாகி ஒரு பான் இந்திய நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 'கீதா கோவிந்தம்' படம் மூலம் இளைய தலைமுறையினரின் ஃபேவரைட் நடிகையான ராஷ்மிகா, 'சுல்தான்' திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'வாரிசு' படத்தில் இளைய தளபதி விஜய் ஜோடியாக இணைந்தார் ராஷ்மிகா. தென்னிந்திய லெவெலில் கொண்டாடப்பட்டு வந்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட் பக்கம் என்ட்ரி கொடுத்து நடிகர் அமிதாப்பச்சன் மகளாக 'குட் பை' படத்திலும் 'அனிமல்' படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாகவும் நடித்து பட்டையை கிளப்பினார்.
டீப் ஃபேக் வீடியோ:
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறைகுறை ஆடையுடன் ராஷ்மிகா மந்தனா இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
ஆனால், இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ வளர்ந்து வரும் AI செயற்கை நுண்ணறிவு மூலம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும், ஒரிஜினல் வீடியோவில் நடிகை ஷாரா படேல் இருப்பதாகவும், அதை மாற்றி ராஷ்மிகாவின் முகத்தை தொழில்நுட்பம் மூலம் பொருத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.
ராஷ்மிகா போல் சித்தரிக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. இந்த வீடியோவுக்கு திரை பிரபலங்கள் உட்பட பலரும் கண்டனங்களையும் தெரிவித்தனர். மேலும், ராஷ்மிகாவும், ”இன்று இந்த அளவுக்கு தொழில்நுட்ப பயன்படுத்தப்படுவதை பார்த்தால் அச்சமாக உள்ளது” என்று வேதனை தெரிவித்தார்.
கைது:
இதனை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வீடியோ வெளியிட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தான் சம்பவம் தொடர்பாக ஆந்திராவில் ஒருவரை டெல்லி போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட பிற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த வீடியோவை அவரை உருவாக்கினாரா? பின்னணியில் வேறு யாராவது உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 ஆண்டுகள் சிறை:
போலீயாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. 3 ஆண்டு சிறையுடன் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க