Atlee: ரசிகர்களே! சல்மான் கானுடன் இணைந்து நடிக்கிறாரா ரஜினி? அட்லீ மாஸ்டர் ப்ளான்

அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடிகர் சல்மான் கான் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன

Continues below advertisement

அட்லீ

ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ (Atlee), ராஜா ராணி படத்தில் இயக்குநராக அவதாரம் எடுத்தார். தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜய் படங்களை இயக்கி பாக்ஸ் ஆபிஸை வசூல் மழையால் நிரப்பினார். அடுத்தபடியாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து கடந்த  ஜவான் படத்தை இயக்கிய அட்லீ, இந்தியாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார். ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தததைத் தொடர்ந்து பாலிவுட்டில் அட்லீயின் மார்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. அடுத்தகட்டமாக ஹாலிவுட் என பல திட்டங்களை நடைமுறைப்படுத்த இருக்கிறார் அட்லீ.

Continues below advertisement

சல்மான் கானை இயக்கும் அட்லீ

ஜவான் படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூன் உடன் அட்லீ கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தப் படத்திற்கு அட்லீ இயக்குநர் சம்பளமாக 80 கோடி கேட்டதால் இப்படத்தை தயாரிக்க இருந்த நிறுவனம் படத்தை கைவிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் உடன் அட்லீ இணைய இருப்பதாக தகவல்கல் வெளியாகின.

அட்லீ படத்தில் ரஜினிகாந்த்

பாலிவுட்டின் கிங் என்றழைக்கப்படும் ஷாருக்கானுடன் கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து தற்போது நடிகர் சல்மான் கான் உடன் அட்லீ கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சல்மான் கானுக்கு அட்லீ கதை சொல்லி அதில் நடிக்க சல்மான் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள கூடுதல் தகவல் என்னவென்றால்  இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்தான அதிகாரப் பூர்வமான தகவல்கள் வரும்வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும். கோலிவுட்டில் சில ஹிட் படங்களைத் தொடர்ந்து ஷாருக் கானை வைத்து ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர் அட்லீ. தற்போது ரஜினியை வைத்து அந்த மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தி காட்டுவாரா அட்லீ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola