Ranbir Kapoor summoned: ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்க பணம் பெற்ற வழக்கில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததுடன், தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டதால், மாநில அரசுகள் சார்பில் ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசு முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் வடமாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்ததாக புகார் கொடுத்துள்ளனர். 


இதனிடையே மகாதேவ் ஆன்லைன் சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் அமலாகக்துறை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்த ரன்பீர் கபூர் பணம் பெற்றதுடன், ஹவாலா மோசடியிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் வரும் 6 ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. 






குற்றம்சாட்டப்பட்டுள்ள ரன்பீர் கபூர் மகாதேவ் ஆன்லைன் சூதாட்டத்தை சமூக வளைதளத்தில் விளம்பரப்படுத்தியதாகவும், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் பிரபல பாலிவுட் நடிகர்கள், பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டில் தொடர்புடைய அனைவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவர்கள் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர் அண்மையில் பாலிவுட் நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்து கொண்டார். 


அதேசமயம் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்தியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட உள்ள ராமாயணம் கதையில் ரன்பீர் கபூர் ராமனாக நடிப்பார் என்றும், அவருக்கு ஜோடியாக சீதை கேரக்டரில் சாய் பல்லவி நடிப்பார் என்றும், ராவணன் கேரக்டரில் கேஜிஎஃப் யாஷ் நடிப்பார் என்ற தகவலும் இணையத்தில் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க: Thalaivar 170: ஜோராக நடந்த “தலைவர் 170” பட பூஜை.. சூப்பரான லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..வைரல் போட்டோ..!


Entertainment Headlines: தலைவர் 170 ஷூட்டிங் ஸ்டார்ட்.. விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.. இன்றைய சினிமா செய்திகள் இதோ..!