தமிழ் திரையுலகின் மிகப்பெரிய கதாநாயகனாக உலா வந்தவர் நடிகர் ராமராஜன். ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு ஒரு காலத்தில் வசூல் நாயகனாக உலா வந்தவர் நடிகர் ராமராஜன்.


ராமராஜன் அக்கா மரணம்:


இவரது அக்கா புஷ்பவதி. அவருக்கு வயது 75. இவர் மதுரை அருகே உள்ள மேலூரில் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த சூழலில், இவர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவால் ராமராஜன் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ராமராஜன் தனது அக்காவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மேலூருக்குச் சென்று கொண்டிருக்கிறார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.


1977ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வரும் ராமராஜன் மதுரை மேலூரைச் சேர்ந்தவர். ராமராஜனுக்கு 2 அண்ணன்கள், 2 அக்காக்கள் உண்டு. இவருக்கு வைரந்தாள், புஷ்பவதி என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். இந்த சூழலில், இன்று புஷ்பவதி காலமானார். அவரது இறுதிச்சடங்கிற்கான பணிகள் மேலூரில் நடைபெற்று வருகிறது.


ரிலீசுக்கு தயாராக உள்ள சாமானியன்:


1986ம் ஆண்டு முதல் கதாநாயகனாக நடித்து வரும் ராமராஜன் நடிகை நளினியை திருமணம் செய்து கொண்டார்.  எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், செண்பகமே செண்பகமே, எங்கள் ஊரு காவல்காரன், நம்ம ஊரு நாயகன், அம்மன் கோயில் வாசலிலே என ஏராளமான ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.


நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல படங்களில் நடித்துள்ளார். 2000த்திற்கு பிறகு  அவர் பெரியளவில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. நடித்த ஓரிரு படங்களும் தோல்வியைச் சந்தித்தது. தற்போது, அவர் சாமானியன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அந்த படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இயக்குனராக 11 படங்களை இயக்கியுள்ளார். திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியாக இருந்தபோது அதன் உறுப்பினராக நடிகர் ராமராஜன் இருந்தார். 


ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு வசூல்களை வாரித்தந்த படங்களை கொடுத்த ராமராஜன் தொடர்ந்து கிராமப்புற கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்ததால் அவருக்கு மக்கள் நாயகன் என்ற பட்டமும் ரசிகர்களால் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Star - Raja Rani Pandian: ரூ.3500 சம்பளம், நடிப்பு தான் மூச்சு.. ஸ்டார் பட இயக்குநரின் அப்பா “ராஜா ராணி பாண்டியன்” உருக்கம்!


மேலும் படிக்க: Behind The Song: நக்மாவுடன் கவுண்டமணியை ஆட வைத்த தந்திரம்.. “வெல்வெட்டா” பாடல் உருவான கதை!