நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரின் பழைய நேர்காணல் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர். 


சிவாஜி ராவ் கெய்க்வாட் ஆக வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர், ரஜினிகாந்த் ஆக 1975 ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். தொடர்ந்து 48 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினி தனது 169வது படமாக ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். 


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படம் தயாரிக்கிறது. மேலும் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி  என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இப்படியான நிலையில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஜூலை 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இதுவரை காவாலா, ஹூக்கும் என இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று மாலை 6 மணி 3வது பாடலாக ஜூஜூபி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி எங்கு பார்த்தாலும் ரஜினிகாந்த் வைப் ஆக இருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் ரஜினியின் பழைய நேர்காணல்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


அடுத்த பிறவியே வேண்டாம் 



  • 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேர்காணலில் பங்கேற்றிருந்தார். அதில் உங்களில் பலம் எது, பலவீனம் எது என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு என்னுடைய பலம் உண்மை, பலவீனம் கோபம் என ரஜினி கூறியுள்ளார். 

  • ஆன்மீகம், அரசியல் ஒப்பிடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “இரண்டையும் ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. இரண்டுமே பாம்பு - கீரி எதிர் எதிர் கொண்டது. 

  • ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த குணம் எது? என கேட்கப்பட்ட கேள்விக்கு தன்னம்பிக்கை என பளீச்சென்று பதில் சொல்கிறார். 

  • கடவுள் நம்பிக்கை இல்லாதவர் பற்றி பேசிய ரஜினி, காலில் செருப்பு போட்டு கொள்ளாமல் கல்லும் முள்ளும் இருக்கிற பாதையில் நடப்பது போன்றது என கூறுகிறார். 

  • இப்படியாக செல்லும் அந்த நேர்காணலில், “அடுத்த பிறவியில் யாராக, எங்கு பிறக்க விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இந்த பிறவியை கடைசி பிறவியாக இருக்க வேண்டும் என முயற்சி செய்கிறேன். சத்தியமா அய்யய்யோ அடுத்த பிறவியே எனக்கு வேண்டாம்” என ரஜினி தெரிவிக்கிறார்.