RasiPalan Today July 26:


நாள்: 26.07.2023 - புதன்கிழமை


நல்ல நேரம் :


காலை 9.15 மணி முதல் மதியம் 10.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


குளிகை :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


எமகண்டம் :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


இன்றைய ராசிபலன்கள் 


மேஷம்


நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு சம்பந்தமான பணிகளில் துரிதம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். வெற்றிகரமான நாள்.


ரிஷபம்


மனதளவில் இருந்துவந்த குழப்பம் குறையும். கடன் பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை யோசிப்பீர்கள். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் அமையும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விவேகமான செயல்பாடுகள் நன்மையை உண்டாக்கும். அமைதி நிறைந்த நாள்.


மிதுனம்


உயர் அதிகாரிகளின் சந்திப்பு ஏற்படும். மனம் விட்டு பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகனங்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.  நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.


கடகம்


வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.


சிம்மம்


மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் தீர்வு கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.


கன்னி


மனதில் எண்ணியதை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.  விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். கணிதம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.


துலாம்


எதிலும் பரபரப்புடன் செயல்படுவீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். உயர்வு நிறைந்த நாள்.


விருச்சிகம்


நினைத்த காரியங்கள் தாமதமாக நிறைவேறும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிராக செயல்பட்டவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். சந்தேக எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களால் மாற்றம் ஏற்படும். உலகத்தைப் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். விவேகம் வேண்டிய நாள்.


தனுசு


பயணங்களால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். கலைத்துறையில் முன்னேற்றம் ஏற்படும். நுட்பமான விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். நன்மை நிறைந்த நாள்.


மகரம்


குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.


கும்பம்


எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தனவரவுகள் திருப்தியாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நவீன கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சோர்வு விலகும் நாள்.


மீனம்


பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.