தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள படம், பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய நாவலைத் தழுவி உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகி சுமார் 450 கோடி வரை வசூலித்தது. இதைத்தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம், வரும் ஏப்ரல் மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘அகநக’ எனும் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. 


இசை வெளியீட்டு விழா:


பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கமல் கலந்து கொள்கிறார். நடிகர் சிம்புவும் இவ்விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இவர்களைத் தவிர, படக்குழுவினர்களான த்ரிஷா, மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். 


பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா, திருவிழா போல கோலாகலமாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியின்போது, சிகப்பு கம்பள வரவேறப்பு, நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களை 360 டிகிரி கேமரா வீடியோ எடுப்பது என பல வித்தியாசமான அம்சங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து காெண்டனர். ஆனால், இன்று நடைபெறவுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி கலந்து கொள்ளவில்லை. இந்த செய்தி, திரையுலக வட்டாரங்களில் சர்ச்சையை கிளப்பி வந்தது. 




ரஜினி கலந்து கொள்ளாதது ஏன்?


பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள போவதில்லை என்ற செய்தி சமூக வலைதளங்களில் வட்டமடிக்க தொடங்கின. இதையடுத்து, ரஜினியை மணிரத்னம் ஒதுக்குவதாகவும் கமல் ஹாசனுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதால் ரஜினி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என பலரும் சர்ச்சையை கிளப்பி வந்தனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இதன் உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 


Also Read|Ponniyin Selvan 2: சிறப்பு விருந்தினராக கமல்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி.. களைகட்டும் பொன்னியின் செல்வன் 2 விழா..!


நடிகர் ரஜினி, லைகா நிறுவனம் தயாரிக்கும் ஜெய்லர் பட ஷூட்டிங்கிள் பிசியாக உள்ளார்.  அது மட்டுமன்றி லைகா  தயாரிக்கும் அடுத்தடுத்த படங்களிலும் ரஜினி நடிக்கவுள்ளார். இதனால்தான் ரஜினியால் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 




“நடிக்க வாய்ப்பு தரவில்லை..”


பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த செப்டம்பர் மாதம் நடைப்பெற்றது. அதில், கலந்து கொண்ட ரஜினி படம் குறித்தும் அப்படத்தின் இயக்குனர் குறித்தும் பேசினார். அப்போது, பொன்னியின் செல்வன் கதையின் முக்கியமான கதாப்பாத்திரமான பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்தரத்தில் நடிக்கும் வாய்ப்பை தனக்கு தருமாறு கேட்டதாகவும் ஆனால் மணிரத்னம் தன்னை நடிக்கவைக்க மறுத்து விட்டதாகவும் ரஜினி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.