சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு வில்லனாக எத்தனையோ நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு நிகரான ஒரு வில்லன் கதாபாத்திம் என்றால் அது ரகுவரன் தான். திரைப்படங்களில் இணைந்து நடிப்பதை தவிர்த்து மிக  நெருக்கமான நட்பு பாராட்டி வந்தனர் இருவர். ஆனால் நடிகர் ரகுவரனின் மறைவின் போது அவரது இறுதி சடங்குகளுக்கு ரஜினி வராதது அன்றும், இன்றும் விளக்கப்படாத ஒரு சர்ச்சையாகவே இருந்து வருகிறது. இப்படியான நிலையில்  நடிகர் ரகுவரனின் மனைவி அதற்கான விளக்கத்தை தெரிவித்திருக்கிறார்.


பாட்ஷா மற்றும் மார்க் ஆண்டனி


ரஜினி மற்றும் ரகுவரன் இருவரும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்கள். எல்லா காலத்திலும் ரசிகர்களால் பேசப்படும் ஒரு படம் பாட்ஷா. மாணிக் பாட்ஷாவாக ரஜினியும் மார்க் ஆண்டனியாக ரகுவரனும் மோதிக்கொண்ட போது ரகுவரனுக்கு நிகராக வேறு எந்த நடிகரும் ரஜினிக்கு வில்லனாக நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.  


நடிப்பைத் தவிர்த்து இருவருக்கும் தனிப்பட்ட ரீதியாகவும் நல்ல நட்புறவு இருந்து வந்திருக்கிறது. ரகுவரனின் மனைவி மற்றும் அவரது இளைய சகோதரர் ரமேஷ் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இருவருக்கும் இடையிலான உறவைப் பற்றியும் ரகுவரனின் மறைவின்போது ரஜினி அவரை பார்க்கவராததற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.


ரஜினிக்கு எழுதிய கடிதம்


ரஜினிக்கும் எனது கணவருக்கும் மிக நெருக்கமான நட்பு இருந்து வந்தது. ரகுவரன் தனது படத்தில் இருந்தால் தன்னால் இன்னும் சிறப்பாக நடிக்க முடியும் என்று ரஜினியே ஒருமுறை சொல்லியிருக்கிறார். ஒருமுறை ரகுவரன் ரஜினியிடம் படங்களில் வன்முறைக் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள சொன்னார். தினமும் நம்மை சுற்றி நடக்கும் எத்தனையோ வன்முறைகள் இருக்கின்றன அதை எல்லாம் நிறுத்தும் வகையில் மக்களிடம் அமைதியைப் பற்றி படங்களில் பேச சொல்லிக் கேட்டுக்கொண்டார்.


அதை கேட்டு தனக்கே உரித்தான வகையில் சிரித்துவைப்பார்.  2008 ஆம் ஆண்டு எனது கணவர் மறைந்த போது திரையுலைச் சேர்ந்த அனைவரும் அவரைப் பார்க்க வந்தார்கள் ரஜினியைத் தவிர. அப்போது அவர் ஒரு படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளில் வெளி ஊரில் இருந்தார் என்பதனால் அவரால் வர முடியவில்லை. நான் அவருக்கு ஒரு கடிதமும் எழுதினேன். ஆனால் அவ்வளவு பெரிய மனிதரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அதை அவருக்கு அனுப்பாமல் வைத்துவிட்டேன். எனது கணவருக்கு அவர் நெருங்கிய நண்பராக இருந்தார். அதே போல் அவரது மருமகனான தனுஷை தன் மகன் போல் கருதி வந்தார் ரகுவரன்.


கடவுள் அவரை தண்டித்துவிட்டார். “ என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தேன். ஆனால் நாங்கள் எப்போது சந்தித்துக் கொண்டாலும் அவர் எங்களிடம் அன்பாக பேசுவார். தனது குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்கு எங்களை அழைத்திருந்தார். “ என்று கூறியிருக்கிறார். தனது நெருங்கிய நண்பரின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தினால் தான் ரஜின் ரகுவரனில் இறுதி சடங்குகளில் கலந்துகொள்ளவில்லை. நடிகர் ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.