விழுப்புரம்: மக்களிடம் எதையும் எதிர்பார்த்து வரவில்லை மக்களின் அன்பு மட்டுமே போதுமானது என்றும் நிறைய பேச கூடாது செயலில் செய்து காண்பிக்கனும் என்பதற்காக மாற்றம் அமைப்பின் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேலைக்காரனாக வந்துள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 


நடிகரும் சமூக சேவகருமான லாரன்ஸ் கடந்த மே 1 ஆம் தேதி முதல் மாற்றம் என்ற அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் விவசாயிகள் பயன்பெரும் வகையில் கிராமங்களுக்கு புதிய டிராக்டரை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகேயுள்ள மோட்சகுளம் பகுதியில் நடிகர் லாரன்ஸ் அப்பகுதி விவசாயிகள் உழவு செய்வதற்கான மோட்சகுளம் பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளி பிரபு என்பவருக்கு டிராக்டரை வழங்கினார்.

 

அப்போது டிராக்டரை வழங்கிய பின் பேசிய லாரன்ஸ், கஷ்டபடுகிற விவசாயிகளுக்கு டிராக்டர் கொடுக்க முடிவு செய்து மாற்றம் அமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மோட்சகுளம் பகுதி விவசாயிகள் பயன்பெரும் வகையில் விவசாயிகள் உழவு செய்வதற்கு இலவசமாக டிராகடரை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென தெரிவித்தார். மேலும், மக்களிடம் எதையும் எதிர்பார்த்து வரவில்லை. மக்களின் அன்பு மட்டுமே போதுமானது என்றும் நிறைய பேச கூடாது செயலில் செய்து காண்பிக்கனும் என்பதற்காக மாற்றம் அமைப்பின் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேலைக்காரணாக வந்துள்ளதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.