தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் , தமிழ அரசியலிலும் கவனிக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியவர் நடிகர் விஜயகாந்த். உடல்நிலை காரணமாக தீவிர அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகி இருக்கும் விஜயகாந்தை கொண்டாடாத திரைத்துறையினரே இருக்க முடியாது. அரசியலில் நுழைந்த சில வருடங்களிலேயே மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார்.
விஜயகாந்த் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் , அவரது நெருங்கிய நண்பரான ராதாராவி சந்திக்க வேண்டும் என கேட்டபொழுது அதனை குடும்பத்தினர் மறைமுகமாக நிராகரித்ததாக வருத்தம் தெரிவித்த ராதரவி , விஜயகாந்த் குறித்து யாரும் அறியாத பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில், "விஜயகாந்த் என்னிடம் கட்சி ஆரமிக்க போறேன்னு சொன்னாரு. நான் வெரி குட் அப்படினு சொன்னேன். கட்சி ஆரம்பிப்பது அவருடைய விருப்பம். நாம தலையிட முடியாது. கட்சி ஆரமிப்பதற்கு முன்னதாகவே சிறப்பாக திட்டமிட்டார்கள். அப்போது யாரோ அவருடன் இருந்திருக்கிறார்கள் . முதல் அடியிலேயே பெரிய ஆளாக மாறிவிட்டார் . மக்கள் விஜய்காந்தை கிளீன் ஹேண்ட் என நம்பினார்கள்.புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு மாஸ் வந்தது விஜயகாந்திற்குதான்.
விஜயகாந்த் ஜெயலலிதாவிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவராகவும் வந்தார். இன்னும் நாற்காலியை பிடிக்க எவ்வளவு தூரம் இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் ஜெயலலிதாவை பார்த்து நாக்கை கடித்தார் என பொய்யான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. அன்றைக்கு இரவே அவரை சந்தித்தேன். விஜயகாந்த் பொய் சொல்லமாட்டார். நான் கேட்டபொழுது என்னிடம் சொன்னார். நான் அந்த அம்மா மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அந்த அம்மாவாலதானே நான் இப்படி ஒரு நிலைக்கு வந்தேன். க்ளோஸ் அப் எடுத்துருக்காங்க. ஒரு மந்திரி என்னை பார்த்து குடும்பத்தை இழுத்து பேசினான். அவனை பார்த்துதான் நாக்கை மடக்கி பேசினேன்.
விஜயகாந்த் அப்போதே விட்டிருந்தால் அடித்திருப்பான் . அவனுக்கு சட்ட திட்டமெல்லாம் கிடையாது. அந்த மாதிரியான ஆள்” என விஜயகாந்தை பற்றி பகிர்ந்திருக்கிறார் ராதாரவி.