ஆர்.கே சுரேஷ்


தயாரிப்பாளராக இருந்து பின் திரைப்படங்களில் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே சுரேஷ். கடந்த ஆண்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே சுரேஷ் சம்பம்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாகவும் ஆர்.கே சுரேஷ் இருந்து வந்தார். 


தற்போது தான் அரசியலில் இருந்து விலகுவதாக அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். " நான் அரசியலுக்கு ரொம்ப ஆசையாக தான் வந்தேன். முதலில் கமலின் மக்கள் நீதி மையக் கட்சியில் தான் என்னுடைய அரசியல் பயணம் தொடங்கயது. இதனை அடுத்து பாரதிய ஜனதா கட்சியிலும் ஆசைப்பட்டு தான் சேர்ந்தேன். ஆனால் அரசியல் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது. அதுமட்டுமில்லாமல் எனக்கு வாழ்வாதாரம் கொடுத்த சினிமாவிலும் என்னால் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை. அதனால் அரசியலில் இருந்து விலகி சினிமாவில் முழு கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறேன்." என அவர் கூறியுள்ளார். ஆர் கே சுரேஷ் பாஜகவில் இருந்து விலகுகிறாரா என்கிற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு " அதற்கு காலம்தான் பதில் சொல்லும் " என தெரிவித்தார்