புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணம் மிகவும் சுவாரஸ்யமானது. அவரது போஸ்ட்டுக்கு லைக்ஸ் மூலம் விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'குக் வித் கோமாளி சீசன் 4' தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களைப் போலவே இந்த சீசனும் நகைச்சுவையும் கலந்த ரியாலிட்டி ஷோவாக உள்ளதால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த வார நிகழ்ச்சி 1970கள் முதல் 2020 வரையிலான திரைப்படங்களில் இருந்து கோமாளிகளை கதாபாத்திரங்களாகக் கொண்டு இருந்தது.
2009 -ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'கில்லி' லிருந்து தளபதி விஜய்யின் கபடி வீரர் கதாபாத்திரத்தை மீண்டும் உருவாக்க புகழ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். நேற்று ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கில்லியில் வரும் விஜய் போன்று தோன்றி புகழ் பெர்பார்மன்ஸ் செய்திருந்தார். இந்நிலையில்தான் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய் ரசிர்கர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான புகழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகளை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்த புகழ் தொடந்து படங்களில் வாய்ப்பு பெற்றார். இதில் சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்த சபாபதி படம் இவரது சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து வலிமை, எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த புகழ் வெளியான அருண் விஜயின் யாணை படத்தில் காமெடியனாக யோகிபாபுவுடன் இணைந்து நடித்தார்.
தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் புகழ் ஜூ கீப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதே சமயம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் புகழ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் பென்சி என்ற பெண்னை காதலித்து வருவதாகவும் விரைவில் தங்களது திருமணம் குறித்து அறிவிப்போம் என்றும் கூறியிருந்தார். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் புகழ்- பென்சி திருமணம் நடைபெற்றது.
மேலும் படிக்க