தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் பல நாட்கள் காத்திருப்புக்கு பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் 'அந்தகன்'. இப்படத்தின் ரிலீசுக்கு முன்னர் புரொமோஷனுக்காக ஏராளமான யூடியூப் சேனல்களுக்கு பேக் டூ பேக் இன்டர்வியூ வழங்கி வந்தார் நடிகர் பிரஷாந்த் . அந்த சமயத்தில் பல தரப்பட்ட கேள்விகளுக்கும் மிகவும் ஜாலியாக சுவாரசியமாக பதில் அளித்துள்ளார். அப்படி அவர் பகிர்ந்து சில இன்ட்ரஸ்டிங் விஷயங்களை பகிர்ந்து இருந்தார். 



 


ஒரு நடிகர் உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் அவருக்கு அடுத்தடுத்து ஏராளமான பட வாய்ப்புகள் அமையும். அதே சமயம் பல காரணங்களால் நல்ல நல்ல படங்களின் வாய்ப்பையும் இழக்க நேரிடும். அப்படி கதை பிடித்துப்போய் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடிக்க முடியாமல்போன படங்கள் நிறைய இருக்கும். அப்படி பிரஷாந்த் மிஸ் பண்ண படம் குறித்து பேசுகையில் " இயக்குநர் ஷங்கரிடம் இருந்து 'காதலன்' படத்துக்காக அழைப்பு வந்தது.  


அந்த சமயத்தில் நான் வேறு ஒரு படத்தில் நடிக்க டேட்ஸ் கொடுத்து இருந்தேன். கால்ஷீட் இல்லாத காரணத்தால் காதலன் படம் பண்ண முடியாமல் போனது. 



 


பிரஷாந்த் படத்தை பயோபிக் படமாக எடுக்க வேண்டும் என்றால் அதில் பிரஷாந்த் கேரக்டரில் எந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும், அதை யார் டைரக்ட் பண்ணா நல்லா இருக்கும்? என கேட்கப்பட்டது. அதற்கு மிகவும் கூலாக பதில் கொடுத்து இருந்தார். அப்படி என்னுடைய பயோபிக் படம் எடுக்கணும் என்றால் அதில் பிரஷாந்த்தாக நான் தான் நடிக்கணும். அப்போ தான் நல்லா இருக்கணும். லோகேஷ் கனகராஜ் இல்லாட்டி நெல்சன் டைரக்ட் பண்ணா நல்லா இருக்கும்.


ஒருத்தர் டார்க் காமெடில எடுப்பார் இன்னொருத்தர் ஆக்ஷன் பேக்ல எடுப்பார். பிரஷாந்த் அப்பாவாக யார் நடிக்கணும் என்பதை டைரக்டர் தான் முடிவு பண்ணனும். அதை நான் சொல்ல முடியாது. நான் வெறும் நடிகன் தான்.