✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Rasi Palan Today, August 9: கும்பத்துக்கு விவேகம் தேவை, மீனத்துக்கு பகை மறையும் : உங்கள் ராசிக்கான பலன்?

செல்வகுமார்   |  09 Aug 2024 09:25 AM (IST)

Rasi Palan Today, August 9: ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் வெள்ளிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 9, 2024:

 

 அன்பார்ந்த வாசகர்களே  இன்றைய தினத்தில் சந்திரன் அஸ்த நட்சத்திரத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார் இந்த சமயத்தில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம்.

 

 மேஷ ராசி

 

  அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இன்றைக்கு நிலமிடம் தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.  கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சமூகத் தீர்வு கிடைக்கும்.  கடன் தொல்லையில் இருந்து விடுபடுவது தொடர்பான  புதிய வாய்ப்புகள் மேலோங்கும்.  நண்பர்களின் ஆதரவு உண்டு.

 

 

 ரிஷப ராசி

 

 அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பொன்னான நாள்  ஐந்தில் சந்திரன் பயணிப்பது சிறப்பான யோகத்தைக் கொண்டு வரும்  குறிப்பாக  அஸ்த நட்சத்திரத்தில் போகும் இந்த தருணத்தில்  நாள் முழுவதும் சிந்தனைகள் இருந்து கொண்டே இருக்கும்.  பழைய நினைவுகளைப் பற்றி சற்று அசைபோடுவீர்கள். பசுமையான பல நினைவுகள் மீண்டும்  கண்முன் வந்து போகும்.  உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள்  உங்கள் முன் சரணடைவார்கள்.

 

 

 மிதுன ராசி

 

 அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏற்றமான நாள்.  பழைய பாக்கி அடைப்பீர்கள்.  பக்தி மார்க்கத்தில் மனம் செல்லும்.  ஆஞ்சநேயர் வழிபாடு சிறந்தது.  உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.  வேலை மாறலாம் என்ற சிந்தனை இருக்கக்கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

 

 

 கடக ராசி

 

 அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  சந்திரன் மூன்றில் பயணிப்பதால் எதிலும் தைரியமாக செயல்படக்கூடிய  காலகட்டம்.  சில சமயங்களில் உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் தொந்தரவுகள் வந்தாலும்  அதை சமாளிக்க கூடிய மன தைரியம் உண்டாகும்.  உறைவிடர்களின் வருகையால்  வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.  வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் நாள்.

 

 

 சிம்ம ராசி

 

 அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  இரண்டில் சந்திரன் பயணிப்பதால்  எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது.  வாக்கு சாகுளித்தால் மற்றவர்களை கவர்வீர்கள்.  புதிய ஆலோசனைகளை மற்றவர்களுக்கு வழங்கி அதன் மூலம் பெயர் புகழ் கிடைக்கும்.  நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.  அனைவருக்கும் நண்பர்கள் ஆவார்கள் .

 

 

 கன்னி ராசி

 

 அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  ராசியிலேயே சந்திரன் செல்வதால் யாரிடமும் எதைப்பற்றியும் பெரிதாக ரகசியங்களை கூற வேண்டாம்.  மனதில் பட்டதை அப்படியே பேச நினைக்கும் உங்களுக்கு  இந்த ஒரு நாள் மட்டும் மௌன விரதம் இருங்கள்.  மகிழ்ச்சிகரமான நாளாக இருந்தாலும் சற்று  பழைய சிந்தனைகளில் முழுகக்கூடும்.  வெற்றியை நோக்கி பயணிக்கும் நாள்.

 

 

 துலாம் ராசி

 

 அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏற்கனவே குரு அஷ்டமத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார.  நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக நடந்து கொண்டிருக்கிறது  கவலை வேண்டாம் எதிர்காலம் சிறப்பாக அமையும்.  இடமாற்றம் தொழில் மாற்றம் பற்றிய சிந்தனைகள் வந்தாலும் சற்று யோசித்து முடிவு எடுப்பது நல்லது.  சிந்தனைகள் அதிகரிக்கும் நாள்.

 

 விருச்சிக ராசி

 

 அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு 11ல சந்திரன் பயணிப்பதால்  வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு.  மனசாட்சியோடு நடந்து கொள்ளும் உங்களுக்கு எப்பொழுதும் இறைவன் துணை இருப்பார்.  வேலையில் போட்டி இருக்கலாம்  ஆனால் அது ஒன்றும் உங்களை பாதிக்காது.

 

 

 தனுசு ராசி

 

 அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும் நாள்.  வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சிக்கல்கள் வந்தாலும் அதை உடைத்து எறிந்து முன்னேறுகின்ற பாதை தெள்ளத் தெளிவாக தெரியும்  புதிய முயற்சிகள் கணிதம் ஆகும்.  ஆரோக்கியம் பெருகும்.  வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கூடும்.

 

 

 மகர ராசி

 

 அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  நல்லதொரு காலம் பிறந்து விட்டது  ஐந்து லட்சம் குரு ராசி ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்க  தற்போது ஏழாம் அதிபதியும் ஒன்பதாம் ஸ்தானத்தில் சந்திரன் நட்சத்திரத்தில் பயணிப்பதால்  நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் ஆகும்.  திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கும் நாள்.  வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டு பேசுவது நல்லது.  குடும்பத்துடன்  குதுகளிக்க வேண்டிய நாள்.

 

 

 கும்ப ராசி

 

 அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  கஷ்டமத்தில் சந்திரன் பயணிப்பதால் எந்த வேலையும் இழுத்து போட்டு செய்ய வேண்டாம்.  வீட்டிலேயே நீங்கள் அமைதியாக இருந்தாலும் வம்பு இழுப்பதற்கு நாலு பேர் வருவார்கள்.  அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இன்று இருக்கிறது.  புதிய காரியங்களை தள்ளிப் போடுங்கள். விவேகம் தேவை, பக்தியில் மனத்தை செலுத்துங்கள் .

 

 

 மீன ராசி

 

 அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  அஸ்த நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கும் போது  உங்களைப் புரிந்து கொள்ளாத நண்பர்கள் கூட தற்போது புரிந்து கொள்ள ஆரம்பிப்பார்கள்.  ஒரு நாள் கழித்து சந்திராஷ்டம வர இருப்பதால் சற்று நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.  சுற்று இருப்பவர்கள் உங்களைப் பற்றி தவறாக பேசக்கூடும். பகை மறையும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்  நாளை கடத்துவது சிறப்பு .  காலபைரவர் வழிபாடு ஏற்றத்தை தரும்.

Published at: 09 Aug 2024 06:05 AM (IST)
Tags: horoscope RasiPalan August rasi palan today Astrology Today Rasipalan RasiPalan Today
  • முகப்பு
  • ஜோதிடம்
  • Rasi Palan Today, August 9: கும்பத்துக்கு விவேகம் தேவை, மீனத்துக்கு பகை மறையும் : உங்கள் ராசிக்கான பலன்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.