நடிகர் பிரசன்னா தனது மகன் விஹான் பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்டை பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது: ”பிறந்தநாள் வாழ்த்துகள் பட்டப்பா! நீ ஒரு ஆசீர்வாதம்! உனது அன்பாலும் புன்னகையாலும் அப்பாவித்தனத்தாலும் எங்கள் வாழ்க்கையை உயிர்ப்பூட்டினாய்! உன் பெயரான VIHAAN என்பதற்கு "விடியல்" என்று பொருள். நீ ஒவ்வொரு நாளும் ஒளிர்வாய். எங்கள் வாழ்வில் நீங்கள் கொண்டு வந்த அத்தனை அழகுக்கும், நான் உனக்கு கொடுக்கக்கூடியது இன்னும் அதிகமான அன்பைத்தான். உலகை வெல்வதற்கு நான் உனது பீடமாக இருப்பேன்! லவ் யூ டா தங்க மகனே” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சினேகா. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தற்போது தனது மகன் விஹானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படங்கள் தொகுப்புடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் 'மை லட்டு, உன்னை நான் எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என வார்த்தைகளில் அடக்க முடியாது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்' எனக் கூறியுள்ளார்.
சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக அவரின் க்யூட்டான புன்னகையை ரசிக்காமல் கடந்து செல்வது அத்தனை எளிதல்ல. தமிழ் சினிமாவில் கே.ஆர்.விஜயாவுக்குப் பின் புன்னகைக்கு பெயர் பெற்றவர் நடிகை சினேகா தான். சினேகா, தனது குடும்பத்தினருடன் இருக்கும் க்யூட் போட்டோக்களையும், வீடியோவையும் அடிக்கடி இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். தற்போது அவரை திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை என்றாலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
மேலும் படிக்க