இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவில் 30 ஆண்டு நிறைவு செய்வதை முன்னிட்டு சென்னையில் லைவ் கான்செர்ட் இன்று நடைபெற இருந்தது. ”மறக்குமா நெஞ்சம்” என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கான்செர்ட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொள்ள இருந்த நிலையில்  கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது


ஆஸ்கர்  நாயகனின் 30 ஆண்டுகள்


1992-ஆம் ஆண்டு மனிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர் ரஹ்மான். தமிழ் சினிமாவில் மூடி சூடா மன்னனாக இருந்து வந்த இளையராஜாவின் சிஷ்யனாக தனது பயணத்தைத் தொடங்கி பின் யார் சிறந்தவர் என்று ரசிகர்கள் மோதிக் கொள்ளும் அளவிற்கு மக்களை ஆக்கிரமித்தார் ரஹ்மான்.  தற்போது 2023-ஆம் ஆண்டில் திரையிசையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார் ரஹ்மான். இந்தி, தமிழ் , என கிட்டத்தட்ட 169 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் . ‘சின்ன சின்ன ஆசையில் 90-களின் குழந்தைகள் தொடங்கி ‘பொன்னி நதி பார்க்கணுமே’ என ஓங்கி ஒலித்து gen z கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்கள் வரை அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.


 இசைத் திருவிழா










ரஹ்மானின் 30 ஆண்டுகளை பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். முன்னதாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரஹ்மான் இசையமைத்த 15 படங்கள் திரையிடப்பட்டன. தற்போது இசை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறக்குமா நெஞ்சம் என்கிற பெயரில் இந்த நேரலை இசை நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர் ரஹ்மான் தவிர்த்து அவரது இசையில் பாடியுள்ள ஜோனிதா காந்தி, ஷக்தி ஸ்ரீகோபாலன் உள்ளிட்டப் பாடகர்கள் கலந்துகொள்ள இருந்தார்கள். முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாடகர்கள் முன்னேற்பாடுகள் செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த ரஹ்மான் தற்போது இன்று நிகழ்ச்சி  நடைபெற இருக்கும் நிலையில் ரசிகர்கள் முன்னதாகவே நிகழ்ச்சிக்கு வந்து தங்களது இடங்களை பிடித்துக்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார். மனதில் நிலைத்திருக்கும் ஒரு அனுபவமாக இந்த கான்சர்ட் இருக்கும் என்று கூறியிருக்கிறார் ரஹ்மான். சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யா ராம் பேலேஸில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது


புயலுக்கு முன் மழை


ரஹ்மானின் இசையை கேட்க காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இன்று சென்னையில் தொடர்மழை பெய்து வந்தது. இந்நிலையில் சென்னை பனையூரில் நடக்கவிருந்த ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது