நடிகர் மாரிமுத்துவின் மரணத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் பிரசன்னா. மாரிமுத்து  இயக்கிய இரண்டு படங்களிலும் கதாநாயகனான நடித்தவர் பிரசன்னா என்பது குறிப்பிடத்தக்கது.


மாரிமுத்து


இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அதிலும், குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’,  ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.  இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். 


சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். 


இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சீரியல் ஊழியர்கள் அருகில் இருந்த சூர்யா ஆஸ்பத்திரிக்கு மாரிமுத்து கொண்டு செல்ல, நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.  ஒரு மணிநேரம் கழித்து அவரது சொந்த ஊரான மதுரை தேனி வருஷ நாட்டுக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள். 


 நாங்கள் சகோதரர்கள் மாதிரி






மாரிமுத்து இயக்கிய கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் உள்ளிட்ட இரண்டு படங்களிலும் கதநாயகனாக நடித்தவர் நடிகர் பிரசன்னா.  மாரிமுத்துவின் மறைவைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் பிரசன்னா. இந்த பதிவில் “ இயக்குனர் ஜி மாரிமுத்துவின் மறைவு அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். #கண்ணும்கண்ணும் #புலிவால் ஆகியத் திரைப்படங்களில் நாங்கள் இணைந்து பணியாற்றினோம் . எங்களுக்கு சகோதரர்கள் போன்ற ஒரு உறவு இருந்தது. எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த பல்வேறு கருத்து வேறுபாடுகளை ஒப்புக்கொண்டோம். அவரது வாழ்க்கை எளிதானதாக இருக்கவில்லை. ஒரு நடிகராக அவர் இப்போதுதான் முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் இன்னும் சிறிது காலம் நம்முடன்  இல்லாமல் போனதில் வருத்தமடைகிறேன். போயிட்டுவாப்பு….” என்று பதிவிட்டுள்ளார் பிரசன்னா. 


யார் இந்த மாரிமுத்து..? 


’அரண்மனை கிளி’ (1993) மற்றும் ‘எல்லாமே என் ராசாதான்’ (1995) போன்ற ராஜ்கிரண் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து, தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களான மணிரத்னம், சீமான், வசந்த், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். மாரிமுத்து. அதன்பிறகு, ஓரிரு திரைப்படங்களையும் இயக்கிய இயக்குநர் மாரிமுத்து 'யுத்தம் செய்' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’எதிர் நீச்சல்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்களிடம் பிரபலமானார். 




மேலும் படிக்க : Ethirneechal Marimuthu Passes away: இயக்குநரும், நடிகருமான எதிர்நீச்சல் மாரிமுத்து காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலக ரசிகர்கள்..!