Actor Prakashraj: பிரதமர் மோடியை பாராட்டிய விஷால்...நக்கல் செய்த பிரகாஷ்ராஜ்..வைரலாகும் ட்வீட்

அன்புள்ள மோடி ஜி, காசிக்கு சென்ற நான் அங்கு நல்ல தரிசனம் மற்றும் பூஜை செய்தேன். உடன் கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன் என விஷால் தெரிவித்திருந்தார்.

Continues below advertisement

நடிகர் விஷாலின் ட்வீட்டிற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ள நிலையில் அதனை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டலடித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடிப்பில் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் ‘வீரமே வாகை சூடும்’  படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர்களும், விஷாலின் நெருங்கிய நண்பர்களுமான ரமணா, நந்தா ஆகியோர் இணைந்து ரமணா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் லத்தி என்ற படத்தை தயாரித்து வருகின்றனர். அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷாலின் முதல் பேன் இந்தியா படமாக  உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

யுவன் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக த்ரிஷா இல்லானா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன், அசராதவன், பொய்க்கால் குதிரை ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.நடிகை ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 

இதற்கிடையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் “அன்புள்ள மோடி ஜி, காசிக்கு சென்ற நான் அங்கு நல்ல தரிசனம் மற்றும் பூஜை செய்தேன். உடன் கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். காசி கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எல்லோரும் எளிதாகத் தரிசனம் செய்யும் வகையில் மாற்றம் செய்த உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக” என பாராட்டு தெரிவித்திருந்தார். 

இந்த பதிவுக்கு பிரதமர் மோடி நேற்று பதிலளித்தார். அதில், காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விஷாலின் ட்வீட்டை குறிப்பிட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டலாக பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ஷாட் ஓகே…. அடுத்தது என்ன ??? என சொல்லி சும்மா கேட்டதாக  கேட்டுள்ளார். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola