விஜய் டிவியின் வைதேகி காத்திருந்தாள் சீரியலில் பிரஜின் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த சீரியலே முற்றிலும் நிறுத்தப்படுவதாக வெளியாகவுள்ளது. இது கர்மாவின் செயல் என பிரஜின் மற்றும் சாண்டரா இன்ஸ்டாவில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.


இன்றைய தலைமுறையினர் அதிகளவில் விரும்பிப்பார்க்கும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே அது விஜய் தொலைக்காட்சியில் தான். குறிப்பாக அதில் வரும் சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு வெள்ளித்திரையில் கிடைக்கும் புகழை விட அதிகளவில் கிடைக்கிறது. அப்படி சின்னத்திரையில் ஆங்கர் மற்றும் சீரியல் ஆக்டராக அறிமுகமானவர் தான் 90 ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பிரஜின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சின்னத்தம்பி சீரியலுக்கு பிறகு அன்புடன் குஷி சீரியலில் தனது பயணத்தை தொடர்ந்தார். அதுவும் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒளிப்பரப்பான வைட்கி காத்திருந்தாள் சீரியலில் நடிக்கத்தொடங்கினார்.





ஜமீன் பரம்பரை பற்றி அந்தக்கதையில் ஜமீனின் வாரிசாக நடித்துவந்தார் பிரஜின். வழக்கம் போல மற்ற சீரியல்களில் கிடைக்கும் மரியாதையும், புகழையும் இந்த சீரியலில் நடிக்கும் போது பஞ்சமில்லை. ஆனால் என்ன சினிமாவில் நடிக்கும் பிரஜின் கனவு ஒரு புறம் நிறைவேறியுள்ளதால் படத்திற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதனால் விஜய் டிவியில் வைதேகி காத்திருந்தாள் சீரியல் ஷூட்டிங்கிற்கு தேதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து என்ன செய்வது என்று யோசித்து வந்த சீரியல்கள் இயக்குநர் சமீபத்தில் திடீரென ப்ரஜின் நீக்கப்பட்டதாக அறிவித்துவிட்டார். இச்செய்தி பிரிஜினின் ரசிகர்கள் மட்டுமில்லாது பிரஜின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கே அதிர்ச்சியாக இருந்தது.


இதனையடுத்து வைதேகி காத்திருந்தாள் சீரியலில் பிரிஜின் நீக்கப்பட்டதையடுத்து அவருக்கு பதில் ராஜபார்வை சீரியல் புகழ் நடிகர் முன்னா நாயகனாக நடிக்கத்தொடங்கினார். இந்நிலையில் தான் சில இந்நிகழ்வுகள் நடந்து முடிந்த சில நாள்களிலேயே வைதேகி காத்திருந்தாள் சீரியல் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தியைக்கேட்ட பிரஜினின் மனைவி சாண்ட்ரா மற்றும் பிரஜின் இருவரும் இன்ஸ்டாவில் இது கர்மா என்று பதிவிட்டுள்ளனர்.


 










இன்ஸ்டாவில் பிரஜின், கர்மா திருப்பி அனைவருக்கும் கொடுக்க வேண்டியதை கொடுக்கும் எனவும், நாம் நம்முடைய வேலையை செம்மையாக செய்தாலே போதும் என விளக்கம் அளித்துள்ளார். மேலும் பிரஜினின் மனைவி சாண்டரா, நீங்கள் என்ன செய்கிறீர்களோ? அது திரும்பவும் உங்களுக்கே கிடைக்கும் என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு இருவரும் மாறி மாறி விஜய் டிவியை விலாசியுள்ளனர். மேலும் ரசிகர்களும் பல்வேறு எதிர்மறை கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.