என்னைப் பற்றிய தவறான தகவல் பரவிய போது நான் மிகவும் கஷ்டப்பட்டேன் என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 


அக்குபஞ்சர் மருத்துவரான சீனிவாசன் லத்திகா என்ற படம்  தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். சினிமா மீது இருந்த தீவிர ஆர்வம் காரணமாக சினிமாவில் அடியெடுத்து வைத்த அவர் தன் பெயரை “பவர் ஸ்டார்” சீனிவாசன் என அழைத்துக் கொண்டார். தொடர்ந்து சந்தானம் நடிப்பில் வெளியான “கண்ணா லட்டு தின்ன ஆசையா” படம் திருப்புமுனையாக அமைந்தது.  அந்த படத்தில் பவர் என்னும் கேரக்டரில் 3 ஹீரோக்களில் ஒருவராக சீனிவாசன் நடித்திருப்பார். இதன்பின்னர் ல படங்களில் காமெடி, சிறப்பு தோற்றம் உள்ளிட்ட பல கேரக்டர்களில் நடித்து வந்தார். இவருக்கு “பவர் ஸ்டார்” என்ற பட்டத்தை விசிக தலைவர் திருமாளவன் தான் வழங்கினார் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். 


இதனிடையே பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் படத்தின் பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது, “நான் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறேன். ஷூட்டிங் சென்று தான் கொண்டிருக்கிறது. இன்னும் ரிலீஸாகவில்லை. ரிலீஸ் செய்வதில் ஏகப்பட்ட பிரச்சினை சென்றுக் கொண்டிருப்பதால் படம் நின்று போய் விடுகிறது. அதனால் என் படம் ரிலீஸாகாமல் உள்ளது. அதனால் தான் என் படங்களை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது.


மேலும் நான் எல்லா சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன். என்னை பற்றி ஏராளமான தவறான தகவல்கள் வருகின்றது. நான் இறந்து விட்டதாக கூட சொன்னார்கள். அப்போது நான் மருத்துவமனையில் தான் இருந்தேன். இதுதொடர்பாக நான் பல இடங்களில் விளக்கம் கொடுத்து விட்டேன். இப்படி தவறான தகவலால் சம்பந்தப்படவர்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்றால் சந்தோசம். ஆனால் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் இப்போது 3 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறேன். 


அதேசமயம் எனக்கு அரசியல் எண்ணம் எதுவும் இல்லை. விஜய் தம்பி வளர்ந்து வருவது சந்தோசம் தான். இதுமாதிரி புதிது புதிதாக வர வேண்டும். விஜய்யின் அரசியல் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சந்தானத்துக்கும் எனக்கும் பிரச்சினையா என கேட்கிறார்கள். அவரும் நானும் தனித்தனியாக ஹீரோவாக நடித்து வருகிறோம். ஒரு துப்பாக்கியில் ஒரு தோட்டா தான் இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க தயாராகவே உள்ளோம் என பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Powerstar Srinivasan: நடிகர் சீனிவாசனுக்கு ”பவர் ஸ்டார்” என்ற பட்டம் வழங்கியது இவரா..? ஆச்சரியத்தில் ரசிகர்கள்