Vanitha Vijayakumar : ஹனிமூனுக்கு நாள் குறிச்சிடலாம்.. வனிதா - பவர்ஸ்டார் காம்போ ரொமான்ஸ்..

தங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டதாக எழுந்த வதந்திகள் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் நகைச்சுவையாக பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Continues below advertisement

வனிதா விஜயகுமார் - பவர் ஸ்டார் திருமணம்

நடிகை வனிதா விஜயகுமார் நடித்துள்ள படம் வைஜயந்தி ஐ.பி.எஸ் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். இதில் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பவர் ஸ்டார் மற்றும் வனிதா விஜய்குமார் இருவரும் தங்கள் திருமணம் தொடர்பாக பரவிய வதந்தி குறித்து நகைச்சுவையாக பேசிக்கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Continues below advertisement

ஹனிமூனுக்கு நாள் குறிச்சிடலாம்

கடந்த 2021 ஆம் ஆண்டு பவர்ஸ்டார் மற்றும் பவர் ஸ்டார் இருவரும் இணைந்து நடித்த பிக்கப் படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . பவர்ஸ்டார் மற்றும் வனிதா இருவரும் திருமண கோலத்தில் ஒருவருக்கு ஒருவர் மாலைப்போட்டுக் கொள்ளும் வகையில் இப்படத்தின் போஸ்டரைப் பார்த்து இருவரும் திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் வலைதளங்களில் பரவின. 

இந்த நிகழ்வைத் தொடர்ந்து தற்போது சில வருடங்களுக்குப் பிறகு ஒரே மேடையில் கலந்துகொண்ட இவர்கள் இந்த வதந்திகள் குறித்து நகைச்சுவையாக பேசிக்கொண்டார்கள்.

மேடையில் பேசிய அவர் ஸ்டார்  எனது தோழி வனிதா விஜயகுமாரை நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறேன் என்றார். அப்போது இடைமறித்து பேசிய வனிதா "தோழியா? நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணமே பண்ணி வச்சுட்டாங்க. நான் வெளி ஊர்களுக்கு போகையில் என்னிடம் நீங்கள் பவர் ஸ்டார் பவன் கல்யாணையா திருமணம் செய்துகொண்டீர்கள்? என்று கேட்கிறார்கள். இல்லை நான் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனைதான் திருமணம் செய்திருக்கிறேன் என்று சொல்கிறேன். உங்களை கல்யாணம் பண்ணி ஒன்னும் நடக்கல" என்று நகைச்சுவையாக கூறினார் கூறினார்

இதற்கு பதிலளித்த அவர் ஸ்டார் "என்ன பண்றது நீங்க தாய்லாந்து போயிடுறீங்க நானும் இங்க இருக்கறதில்ல. ஒரு நாள் ஹனிமூனுக்கு நாள் குறிச்சிடலாம்" என்று கூறினார். வனிதா விஜயகுமார் மற்றும் பவர்ஸ்டார் இருவருக்குமான உரையாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola