கேரளம் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் அறிக்கை தாக்கல் செய்தார்.
கேரளம் - வயநாடு நிலச்சரிவு:
வயநாட்டில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகள் 6 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த பேரிடரில் 360 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவ படையினர் மொத்தம் 1300 க்கும் மேற்பட்டவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
முண்டக்கை, சூரல்மலா, அட்டமலா, நூல்புழா கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து 3 முறை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் அப்பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியது. 48 மணி நேரத்தில் 572 மி.மீ மழை பதிவாகியது என தெரிவித்தார்.
இதனிடையே, தமிழ்நாடு அரசின் சார்பில், ரூ. 5 கோடிக்கான காசோலையை, அமைச்சர் எ.வ. வேலு கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார்.
இந்நிலையில், அங்கு மாநில மீட்பு படையினர் மட்டுமன்றி, தேசிய மீட்பு படையினர் , இராணுவத்தினர் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீட்பு பணி குறித்தும், நிலச்சரிவு குறித்தும் , அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நிலை குறித்தும் , பிரதமர் மோடியிடம் அறிக்கையாக சமர்பித்தார் அமைச்சர் ஜார்ஜ் குரியன்.
கேரள பாதிப்பு தொடர்பான உதவி எண்கள்:
- மீட்பு உதவிகள் தேவைப்படுவோர் 1077 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைக்கலாம் என வயநாடு மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு அறிவித்துள்ளது
- தேசிய சுகாதார இயக்கம் 9656938689 / 8086010833
- மாவட்ட அவசர செயல்பாட்டு மையம் - 04936 204151 / அலைபேசி : 9562804151, 8078409770 .
- சுல்தான் பத்தேரி தாலுக்கா: அவசர செயல்பாட்டு மையம் - 04936 223355 (அ) 04936 220296
- மந்தவாடி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையம் - 04935 241111, 04935 240231 / அலைப்பேசி 9446637748
- வைத்திரி தாலுக்கா அவசர செயல்பாட்டு மையம் - 04936 256100 / அலைப்பேசி எண்கள்: 8590842965, 9447097705