Actor Parthiban: ப்ரேக்கெல்லாம் விடமாட்டார்.. அவருக்கு வேண்டியது கிடைக்கணும்.. பார்த்திபன் சொன்ன சுவாரஸ்யம்

மணிரத்னம் மனிதாபிமானம் இல்லாதவர் என நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார்.

Continues below advertisement

மணிரத்னம் மனிதாபிமானம் இல்லாதவர் என நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார். 

Continues below advertisement

இது குறித்து பார்த்திபன் கூறும்போது, “உண்மையில் மணிரத்னம் மனிதாபிமானம் இல்லாதவர். ஷூட்டிங்கில் அவர் பிரேக்கே விடமாட்டார். அவருக்கு வேண்டியது வரும் வரை விடவே மாட்டார்" என்றார் பார்த்திபன்

அவரைத் தொடர்ந்து பேசிய கார்த்தி ராட்சஸ மாமனே பாட்டு படப்பிடிப்பின்போது எனக்கு கால்கள் நன்றாக வீங்கி இருந்தது.

ஆனால்  படியில் இருந்து ஆடிக்கொண்டே கீழ் இறங்கி வருவது போல ஷாட். பிருந்தா மாஸ்டரிடம் ஷாட்டை பிரித்து எடுங்கள் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அந்த சமயம் அங்கு மணிரத்னம் வந்தார். சிங்கிள் ஷாட்டில் வரவேண்டும் என்றார். நான் அதிர்ந்து விட்டேன். அதில் ரீடேக்கும் இருந்தது. வேறு வழியே இல்லாமல் நடித்தேன் என்று கார்த்தி சொல்ல பார்த்திபன் சிரித்தார். 

 

தமிழ் திரையுலகில், பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பல மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.முன்னதாக வெளியான சோழா சோழா பாடலும், பொன்னி நதி பாடலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. இதையடுத்தடுத்து படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களுக்கும் அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோர் கலந்து கொண்டனர். 

படம், செப்டம்பர் 30-ந்தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில், இதில், இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் ஜெயம் ரவி,கார்த்தி, பார்த்திபன் மற்றும் நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு படக்குழு பதிலளித்தனர்.

Continues below advertisement