படங்களில் நடிப்பது, இயக்குவது தாண்டி சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் நடிகர் பார்த்திபன்.


2022ஆம் ஆண்டு இரவின் நிழல், பொன்னியின் செல்வன் என மீடியா வெளிச்சத்திலேயே இருந்த நடிகர் பார்த்திபன் தன் நடிப்பு, இயக்கம் இரண்டிலும் பாராட்டுகளைப் பெற்றார்.


சென்ற ஆண்டு சிறப்பானதாக அமைந்த உற்சாகத்தில் இந்த ஆண்டு புத்தாண்டை பார்த்திபன் இன்னும் அழகாகக் கொண்டாடி தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


புத்தாண்டு தினமான ஜனவரி 1 இவரது அம்மா பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் தன் அம்மாவின் வீடியோவை நடிகர் பார்த்திபன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


கவிதை எழுதுவதில் வல்லவரான பார்த்திபன், “வருடம் மட்டுமல்ல, நான் பிறந்த பூமி பிறந்த தினம்” எனவும் அழகாகப் பதிவிட்டுள்ளார்.


 






இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.


இந்த ஆண்டு பார்த்திபன் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது. மேலும் அபிஷேக் பச்சன் நடிப்பில் பார்த்திபன இந்தியில் இயக்கியுள்ள ஒத்த செருப்பு பட ரீமேக்கான 'SSS7' படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Officers Promotion and Transfer : பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உட்பட 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழக அரசு அதிரடி..