தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். ரசிகர்களால் தல என அன்போடு அழைக்கப்படும் இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடித்திருக்கும் படம் வலிமை.  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூர் இந்த படத்தைத் தயாரித்து இருக்கிறார். படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி உள்ளார். 

 

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி  நடித்து வருகிறார்.  இவர்களுடன் யோகிபாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
  கரோனா ஊரடங்கு காரணமாகப் படத்தின் படப்பிடிப்பு முடிக்காமல் இத்தனை மாதங்களாக இழுபறியாக இருந்தது.

 

இதனையடுத்து இறுதியாக வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ரஷ்யாவில் நிறைவு பெற்றன. படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினார்கள். ஆனால் அஜித் மட்டும் சென்னை திரும்பாமல் ரஷ்யாவிலேயே இருந்தார். அவர் ஏன் வரவில்லை? அதற்கு பின்னால் என்ன காரணம் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். பிறகு அவர் ரஷ்யாவில் இருந்து  5000 கிலோ மீட்டர் பைக்கில்  தனது இருசக்கர வாகனத்திலே பயணிக்க திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியானது. 

 





அஜித் ரஷ்யாவில் உள்ள கொலம்னா சாலைகளில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தனது இருசக்கர வாகனத்திலே பயணித்து இருக்கிறார். அப்போது அவர் பைக் பயணத்தின் போது நடிகர் நவ்தீப்புடன் சென்று இருந்தார் போல. நடிகர் நவதீப், அஜித் குமாருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

 

அந்த பதவில்,  ”இந்த மனிதனின் தூய அன்பு. அவருடைய "ஹாய்" சொன்ன தொனியைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். அதனை கேட்டு நாங்கள் ஏற்கனவே பல முறை, பல வருடங்கள் சந்தித்து இருப்பது போன்று தெரிந்தது. அது என்னை மிகவும் வியக்க வைக்கிறது. அவருடைய எளிமையான நுண்ணறிவுள்ள குணமும் அனுபவமும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையிலேயே அவர் ஒரு அற்புதமான மனிதர். thala for a reason“எனப் பதிவிட்டு இருக்கிறார்.

 

வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில், படத்தின் எந்த  அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது. இதனால் எங்கு சென்றாலும் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டுவந்தனர். இறுதியாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வெளியானது.