நடிகர் சங்கம் புதிய கட்டிடம்
தென் இந்திய நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு ரூ.40 கோடி தேவைப்படும் என்று நடிகர் சங்கத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தென் இந்திய திரைப் பிரபலங்கள் தங்கள் பங்குக்கு நிதி வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்க கட்டப் பணிகளுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிகர் சங்கக் கட்டடத்திற்கு நிதி வழங்கினார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ 1 கோடி நிதி வழங்கினார்.
நெப்போலிய ஒரு கோடி நிதி
கமல் , விஜய்யைத் தொடர்ந்து தற்போது, நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க கட்டுமானப் பணிகளுக்காக ரூ 1 கோடி நிதி வழங்கியுள்ளார். இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 - 2006 ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி) வைப்பு நிதியாக வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.