நடிகர் நானி


ராஜமௌலி இயக்கத்தில் வெளியான “நான்  ஈ” படத்தின் மூலம் ரசிகர்களிடம் பரவலாக அறியப்பட்டவர் நானி. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில் ஒருவர நானி. ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் கடைசியாக அவர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து தர்போது நானியின் 30 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ஹாய் நானா.


ஹாய் நானா


ஷவுர்யுவ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக “சீதா ராமம்” புகழ் மிர்ணாள் தாகூர் நடிக்கிறார். மேலும் ஜெயராம், பேபி கியாரா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹசீம் அப்துல் வஹாப் , ஹாய் நன்னா படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படியான நிலையில் வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள “ஹாய் நன்னா” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகர் நானி  நாங்கள் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவோம் என்று பதிவிட்டுள்ளார்.






ட்ரெய்லர் எப்படி



தந்தை மகளுக்கு இடையிலான உறவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ஹாய்நானா படத்தின் ட்ரெய்லர் எனோஷன் ரொமான்ஸ் , சோகம்  ஆகிய உணர்ச்சிகள் அடங்கிய ஒரு முழுமையான படமாக இருக்கும் என்பதை இந்த ட்ரெய்லர் மூலம் தெரியவருகிறது. தன்னுடைய மகளுடன் வாழ்ந்து வரும் நானி தனது அம்மாவைப் பற்றி தன் மகள் கேட்கும்போது தவிர்த்து வருகிறார்.


இப்படியான நிலையில் மூன்றாவது நபராக வரும் மிருணாள் தாக்கூர் இந்த தந்தை மகள் கதையில் எப்படி இணைகிறார். நானியின் முந்தைய மனைவி அவரை விட்டுச் சென்றதற்கான காரணம் என்ன.  நானி எந்த தவறுக்காக குற்றவுணர்ச்சியை சுமக்கிறார் என்பதே இந்தப் படத்தின் கதை. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்த ட்ரெய்லரின் நடிகை ஷ்ருதி ஹாசனும் இடம்பெற்றிருக்கிறார்.  நடிகர் நானியின் கேரியரில் ஹாய் நானா திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.


முன்னதாக ஹாய் நன்னா படம் குறித்து பேசிய நடிகை மிருணாள் தாக்கூர் , இந்த படத்தின் கதை, தான் படித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என்று கூறி இருந்தார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. மேலும் தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்ட கதைகளுக்கு என்றுமே மொழி ஒரு தடையாக இருந்தது இல்லை. அதனால் அனைத்து மொழி ரசிகர்களையும் இப்படம் எளிதாக சென்றடையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.