தங்கள் குழந்தைகளுக்கு முதன்முறையாக ஹேர் கட் செய்யும் க்யூட் வீடியோவை நகுல் - ஸ்ருதி தம்பதியினர் பகிர்ந்துள்ளனர்.
இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் 2003ஆம் ஆண்டு கோலிவுட்டில் அறிமுகமான நடிகர் நகுல், தேவயானியின் தம்பி எனும் அடையாளத்தைக் கடந்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் உள்ளிட்ட படங்களின் மூலம் தனி கவனம் பெற்றார்.
நடிப்பு தாண்டி பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களைக் கவர்ந்த நகுல், தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக தங்கள் காதல் பக்கங்களைப் பகிர்ந்து வந்த இந்தத் தம்பதி, நெட்டிசன்களின் மனங்களைக் கொள்ளையடித்து ட்ரெண்டிங் தம்பதி லிஸ்டில் இடம்பெற்றனர்.
தொடர்ந்து இவர்களது மகள் பிறந்ததும் அகிரா என பெயர் சூட்டிய நகுல் - சுரபி தம்பதி அகிராவின் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வந்தனர்.
அகிராவின் வீடியோக்களுக்கென்று தனி ஃபேன் ஃபாலோயிங் அதிகரிக்க முன்னதாக நகுல் - ஸ்ருதி தம்பதிக்கு மகன் பிறந்தார். வாட்டர் பர்த் முறை மூலம் தன் மகனைப் பெற்ற ஸ்ருதி இது குறித்து மகிழ்ச்சியுடன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
மகனுக்கு அமோர் எனப் பெயரிட்ட நகுல் - ஸ்ருதி தம்பதி தங்கள் குடும்ப வீடியோக்களைத் தொடர்ந்து பகிர்ந்து நெட்டிசன்களையும் தங்கள் ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் குழந்தைகள் இருவருக்கும் முதன்முறையாக மொட்டையடிக்கும் வீடியோவை ஸ்ருதி - நகுல் தம்பதியினர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியொ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி ட்ரெண்டாகி வருகிறது.
முன்னதாக இதேபோல் நகுல் தன் செல்ல மகள் அகிராவுடன் அடித்துப் பிடித்து ஐஸ்க்ரீம் சாப்பிடும் வீடியோவும் இன்ஸ்டாவில் ட்ரெண்டானது. சென்ற வாரம் நகுல் - ஸ்ருதி தம்பதி தங்கள் ஆறாவது திருமண நாள் விழாவைக் கொண்டாடியும் வீடியோ பகிர்ந்து லைக்ஸ் அள்ளினர். நடிகர் நகுலின் அடுத்த படமான வாஸ்கோடகாமா இந்த ஆண்டுக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.