நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சமந்தா  பிரிவுக்கு பாரத ராஷ்டிர சமிதியின்  (பிஆர்எஸ்) தலைவர் கே.டி. ராமராவ்  காரணமாக இருந்தார் என தெலங்கானா வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கோண்டா சுரேகா குற்றம் சாட்டியிருந்தார். அவரது கருத்திற்கு தற்போது நடிகர்  நாகர்ஜூனா கண்டனம் தெரிவித்துள்ளார். 


சமந்தா நாகர்ஜூனா பிரிவுக்கு கே டி ராமராவ் காரணம்?


 நடிகர்  நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுக் கொண்டார்கள். இந்த விவாகரத்திற்கான காரணங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத நிலையில் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. தற்போது தெலங்கானா வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கோண்டா சுரேகா நாக சைதன்யா மற்றும் சமந்தா  பிரிவுக்கு பாரத ராஷ்டிர சமிதியின்  (பிஆர்எஸ்) தலைவர் கே.டி. ராமராவ்  காரணம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதுமட்டுமில்லாமல்  கே.டி. ராமராவ் பல நடிகைகள் சினிமாவை விட்டு விலகி சீக்கிரம் திருமணம் செய்து கொள்வதற்கும் காரணமாக இருந்தார். பொதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்த ராமராவ் பல நடிகர்களை மிரட்டியுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது நடிகர்  நாகர்ஜூனா கொண்டா சுரேகாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 


 நடிகர் நாகர்ஜூனா எதிர்ப்பு






”மதிப்பிற்குரிய கொண்டா சுரேகா அவர்களின் கருத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன். உங்கள் அரசியல் எதிரிகளை விமர்சிக்க அரசியலை விட்டு விலகி இருக்கும் திரைக் கலைஞர்களை பயன்படுத்தாதீர்கள். உயர் பதிவியில் இருக்கும் உங்களைப் போன்ற ஒரு பெண் அடுத்தவர்களின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுங்கள். என் குடும்பத்தைப் பற்றி நீங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் தவறானவை மற்றும் அவமதிக்கத் தக்கவை. அதனால் உங்களது கருத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். “ என நாகர்ஜூனா தெரிவித்துள்ளார்.