Matthew Perry: மன அழுத்தத்தின் உச்சம்; மாத்திரை போட்டும் அடங்கவில்லை...மேத்யூ பெர்ரி உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல்!

சாண்ட்லராக கலக்கிய மேத்யூ பெர்ரி மரணம் குறித்து சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Continues below advertisement

Matthew Perry: சாண்ட்லராக கலக்கிய மேத்யூ பெர்ரி மரணம் குறித்து சில அதிர்ச்சியூட்டும்  தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

Continues below advertisement

சாண்ட்லராக கலக்கிய மேத்யூ பெர்ரி மரணம்:

இந்தியாவில் பல ஆங்கில சீரிஸ்கள் பிரபலமாக இருக்கின்றன. அதில், அனைவரையும் கவர்ந்தது அமெரிக்க டிவி தொடரான ’Friends'.  இந்த தொடர் 1994 முதல் 2004 வரை ஒளிபரப்பானது. தற்போது ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இத்தொடருக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. மொத்த 10 சீசன்கள், 236 எபிசோட்களை கொண்ட இந்த தொடரில் இடம்பெற்ற அத்தனை கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம்.

அதாவது, நியூ யார்க்கில் இருக்கும் ஆறு நண்பர்களையும் அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து இறுதி தொடர் வரை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.

ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், அதில் தனது காமெடியால் அனைவரையும் கவர்ந்தவர் மேத்யூ பெர்ரி. இவர் இந்த தொடரில் 'Chandler Bing’ என்ற கதாபாத்திரத்தில், தனது தனித்துவமான காமெடியால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தார். குறிப்பாக, பிரண்ட்ஸ் தொடரில் ஜோயி ட்ரிபியானி கதாபாத்திரத்துடன் சாண்ட்லர் கதாபாத்திரம் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்படி ரசிகர்களை கவர்ந்த மேத்யூ பெர்ரி அக்டோபர் 29ஆம் தேதி உயிரிழந்தார்.  இவருக்கு வயது 54. மேத்யூ பெர்ரி, தனது வீட்டில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

பெர்ரியின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?

இந்நிலையில், மேத்யூ பெர்ரியின் உடற்கூராய்வு அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில், "கெட்டமைனின் (ketamine) என்ற அனஸ்தீசியா மருந்தை அதிகளவில் எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக” உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன உளைச்சல், மனச்சோர்வு, தற்கொலை எண்ணம் போன்றவைகளுக்கு இந்த கெட்டமைன் மருந்து பயன்படுத்தப்படுகிறது.  இந்த மருந்து மூக்கு வழியாக மட்டுமே செலுத்த அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளிச்சந்தையில் கெட்டமைன் மருந்து மாத்திரையாக விற்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த மருந்தை அதிகளவில் எடுத்துக் கொண்டால், உயிரிழக்கவும் வாய்ப்பிருக்கிறது. 

"இந்த மருந்து தான் மேத்யூ பெர்ரியின் மரணத்திற்கு காரணம் என்று உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இந்த மருந்து பெர்ரியின் சுயநினைவை இழக்க செய்வதோடு, சுவாச பிரச்னையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், குளிக்கச் சென்ற அவர், நீரில் மூழ்கி இறந்திருக்கிறார்.  மேலும், அவர் இறப்பதற்கு முன், மதுபானம், போதைப்பொருள் எதுவும் பயன்படுத்தவில்லை" என்று பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க

Livingston: கிறிஸ்துவ மதத்தில் இருந்து மாறியது ஏன்? - நடிகர் லிவிங்ஸ்டன் கொடுத்த விளக்கம் - கிளம்பிய சர்ச்சை

Watch Video : குடும்பத்தினரால் தாக்கப்பட்ட சிஐடி நடிகை... காயங்களுடன் வைஷ்ணவி தன்ராஜ் வெளியிட்ட வீடியோ  

Continues below advertisement
Sponsored Links by Taboola