தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்தவர் நடிகர் பாரதிராஜா . இவர் தமிழ் சினிமாவில் செய்த புரட்சிகளை தனி கட்டுரையாகத்தான் எழுத வேண்டும். இவரது மகன் மனோஜ் . ‘திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா ‘ என 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் திரைப்படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு முன்னதாக சினிமாவில் சில படங்களில் உதவி இயக்குநராக களமிறங்கினார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் , திரைப்படம் சம்பந்தமாகவும் படித்திருக்கிறார் மனோஜ். என்றாலும் கூட அடுத்தடுத்த பல படங்களில் நடித்த மனோஜுக்கு பெரிதாக மார்கெட் உருவாகவில்லை.
படத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதில் மனோஜ்தான் ரஜினிக்கு டூப்பாக நடித்தார். அந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. அதனை பலர் பகிர்ந்திருப்போம். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பகிந்துக்கொண்ட மனோஜ். ‘அந்த சம்பவம் திட்டமிட்டதல்ல ..எதர்ச்சையாக நடந்தது..என்றார். எந்திரன் படப்பிடிப்பை கோவாவில் நடத்திக்கொண்டிருந்தார்களாம் . அப்போது இயக்குநர் ஷங்கர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நடித்தாராம் மனோஜ் . படப்பிடிப்பு சமயத்தில் ரஜினிகாந்திற்கு , கண்களில் ரோபோ லென்ஸ் வைக்க வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது. அப்போது மனோஜ் அதற்கு பழக்கப்பட்டவர் என்பதால் அவரை படக்குழு அழைத்திருக்கிறது. உடனே ரஜினிகாந்திற்கு லென்ஸ் வைப்பதற்கு சில டிப்ஸ்களை சொல்லியபடியே , லென்ஸை பொருத்த முயற்சி செய்தாராம் மனோஜ் , ஆனால் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகும் அவர் , நான் சொல்லியபடியே கண்களை வைக்கவில்லை. அதே தப்பைத்தான் திரும்ப திரும்ப செய்தார். என்கிறார் மனோஜ். உடனே “ சார் விட்டுடுங்க...தமிழ்நாட்டுல யாரும் என்னை விட மாட்டாங்க.சூப்பர் சார் கண்ண குத்திட்டேன்னு சொல்லிடுவாங்க” என கூறினாராம் மனோஜ் . உடனே ரஜினிகாந்த் சத்தமாக சிரித்தாராம்.