லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் இறுதிகட்ட வேலைகளில் நடைபெற்று ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூல் அலிகான், கெளதம் மேனன், மிஸ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது லியோ திரைப்படம்.
அடுத்தடுத்த அப்டேட்கள்
லியோ படத்தின் இசை வெளியீட்டு வருகின்ற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியீட்டு வருகிறது படக்குழு. இதுவரை தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
லியோ படம் குறித்த அடுத்த தகவலைத் தெரிந்துக் கொள்வதற்காக ரசிகர்கள காத்திருக்கு நிலையில், படத்தில் நடித்துள்ள நடிகர் மகேந்திரன் லியோ படத்தில் விஜய்யின் இண்ட்ரோ காட்சியைப் பார்த்த அனுபவத்தை கல்லூரி மாணவர்களுடன் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
மாஸ்டர் மகேந்திரன்
குழந்தை நட்சத்திரமாக பல தமிழ் படங்களில் நடித்து அசத்தியவர் நடிகர் மகேந்திரன். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியில் இளம் பருவ கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். சமீபத்தில் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார். அப்போது லியோ திரைப்படம் குறித்து மாணவர்கள் அவரிடம் கேட்டபோது படத்தில் விஜய்யின் இன்ட்ரோ காட்சி குறித்து அவர் பேசியதை கேட்டு மாணவர்கள் மகிழ்சியில் கூச்சலிட்டு கத்தினார்கள்.
முதல் ஐந்து நிமிடம் பார்த்து விட்டேன்
“ சமீபத்தில் நான் லோகேஷ் கனகராஜை பார்க்கச் சென்றிருந்தேன். அவர் லியோ படத்தின் எடிட்டிங் வேலைகளில் இருந்தார். அப்போது எடிட் செய்யும் அறையின் உள்ளே விஜய்யின் ஒரு பெரிய போஸ்டரை ஸ்கிரீனில் பார்த்தேன்.
இது என்னவென்று லோகேஷிடம் கேட்டபோது லியோ படத்தில் விஜய்யின் இண்ட்ரோ காட்சியை என்னை பார்க்கச் சொன்னார். அதற்கு நான், “வேண்டாம் நான் பார்த்தேன் என்று தெரிந்தால் என்னை எல்லாரும் தொந்தரவு செய்வார்கள். நானும் எதையாவது உளறிவிடுவேன்” என்றேன்.
அதற்கு லோகேஷ், “நீ கண்டிப்பாக பார்க்க வேண்டும் ஆனால் யாரிடமும் எதுவும் சொல்லக் கூடாது அதுதான் உனக்கு தண்டனை என்று என்னிடம் சொன்னார். விஜய்யின் அறிமுகக் காட்சியை ஐந்து நிமிடம் பார்த்தேன்” என்று சொல்லிவிட்டு இதனைத் தொடர்ந்து எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார். இது விஜய் ரசிகர்களை படம் குறித்தான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.