தொலைக்காட்சிகளில் தொடங்கி சினிமாவில் வெற்றிகரமான பயணித்து ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றவர்களில் முக்கியமானவர் நடிகர் மாதவன்.


1996ஆம் ஆண்டு இந்தி சீரியலில் அறிமுகமான நடிகர் மாதவன், இயக்குநர் மணிரத்னத்தின் கண்களில் பட்டு 2000ஆம் ஆண்டு அலைபாயுதே படம் மூலம் ஓவர்நைட்டில் தமிழ்நாட்டின் சென்சேஷனாக மாறிப்போனார்.


தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் படம் மூலம் தமிழ்நாட்டின் சாக்லேட் பாயாக உருவெடுத்த மாதவனை கொண்டாடித் தீர்க்காத பெண்கள் இல்லை என சொல்லலாம்.


ஆனால் தொடர்ந்து சாக்லேட் பாய் இமேஜூக்குள் மட்டும் அடங்கிவிடாமல், கன்னத்தில் முத்தமிட்டால், தம்பி உள்ளிட்ட படங்களில் கோபக்கார இளைஞன் என பல வெரைட்டியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை அசரடித்தார்.


மற்றொரு புறம் இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பிறமொழிப் படங்களிலும் நடித்த கடந்த 22 ஆண்டுகளாக முக்கியமான நடிகர்களுள் ஒருவராக மாதவன் வலம் வருகிறார்.


நடிப்பு தவிர இயக்கத்திலும் ஆர்வம் கொண்ட மாதவன், இறுதியாக ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். 


இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன் வசூலிலும் சொதப்பியதாகவே தகவல்கள் வந்துள்ளன.


இந்நிலையில், நடிகர் மாதவன் தற்போது புது லுக்கில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.


தமிழில் அலைபாயுதே மாதவன் எனக் கொண்டாடப்பட்ட நடிகர் மாதவன், இந்தியில் ரெஹனா ஹே தேரி தில் மெய்ன் மாதவன் (மின்னலே ரீமேக்) எனக் கொண்டாடப்பட்ட நிலையில், இந்த புகைப்படத்தில் மீண்டும் ரெஹனா ஹே தேரி தில் மெய்ன் மாதவன் திரும்பி வந்துள்ளார் என மாதவனின் ரசிகர்கள் உற்சாகமாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.




ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் படத்துக்குப் பிறகு அம்ரிக்கி பண்டிட் எனும் இந்தி படத்தில் மாதவன் நடித்துள்ள நிலையில், 'தன் புது படத்துக்கான லுக் இது’ என மாதவன் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.


அடுத்ததாக தான் நடிக்கும் தமிழ் படம் குறித்து மாதவன் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இந்த லுக் மாதவனின் அடுத்த தமிழ் படத்தின் லுக்காக இருக்குமோ என்றும் ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் உரையாடி வருகின்றனர்.


ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் படத்துக்குப் பிறகு தனக்கு எந்தப் படத்தையும் இயக்கும் ஆர்வம் தனக்கு இல்லை என்றும், மனதுக்கு நெருக்கமான கதை அமைந்தால் படம் இயக்குவேன் என்றும் மாதவன் முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Manu James Passes Away : அதிர்ச்சி.. விரைவில் வெளியாக இருந்த முதல் கனவு திரைப்படம்... படம் வெளியாகும் முன்பே மறைந்த அறிமுக இயக்குநர்!