இந்தியாவை பொறுத்தவரை ட்விட்டரில் வெறும் 0.2 சதவீதத்திற்கு குறைவான மக்களே  இருக்கிறார்கள் என்கிறார் நடிகர் மாதவன் 

மாதவனிடம் பேட்டி ஒன்றில் உங்களது வேலையும், வீட்டையும் எப்படி சமமாக பேலன்ஸ் செய்வது என்று கேட்கபட்டது. அதற்கு பதிலளித்த மாதவன், “ உங்களது வெற்றியும் தோல்வியும், நீங்கள் எந்த அளவுக்கு பழகுவதற்கு மென்மையானவர்களா இருக்கிறீர்கள், உங்களது எதிரில் இருக்கும் நபரின் உங்களை பற்றிய எண்ணம் எந்த அளவுக்கு நல்ல விதமாக இருக்கிறது என்பதை பொறுத்தது.

மக்களுக்கு இன்று நிறைய மன அழுத்தம் இருக்கிறது. பலவற்றை எதிர்கொள்கிறார்கள். ஏதோ நல்லது செய்தால் கூட, அதை குற்றம் சொல்ல ஆள் இருக்கிறது. இது வாழ்கையின் ஒரு பகுதி. இவையெல்லாம் கடந்து சென்று விடும். இறுதியில் எது மிஞ்சியிருக்கும் என்றால் அதில் இருக்கும் நன்மை மட்டுமே. அதை நான் பரப்ப விரும்புகிறேன்.  

 

சோசியல் மீடியாவில் அதிக தாக்கம் உள்ள நபர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவை பொருத்தவரை ட்விட்டரில் வெறும் 0.2 சதவீதத்திற்கு குறைவான மக்கள் மட்டுமே இருக்கிறார்கள். அப்படியானால், 1.4 பில்லியன் மக்கள் தொகையில் வெறும் 25 சதவீதத்தினர் மட்டுமே ட்விட்டரில் இருக்கிறார்கள். சிலர் இதையே உலகம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அதில் வரும் கருத்துக்களால் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதனால் ட்விட்டர், பேஸ்புக் சொல்லும் கருத்துகளை வைத்து நீங்கள் யார் முடிவு செய்ய முடியாது” என்று பேசியிருக்கிறார். 

பிரபல இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்கை கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் ராக்கெட்ரி நம்பி விளைவு. பாகிஸ்தானுக்கு இந்திய ஏவுகணை குறித்த பாதுகாப்பு ரகசியங்களை விற்றதாக அவர் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதே படத்தின் கதை. நம்பி நாராயணனாக மாதவனும், அவரது மனைவியாக சிம்ரனும் நடித்திருக்கின்றனர். சிறப்புத்தோற்றத்தில் இந்தியில் ஷாருக்கானும், தமிழில் சூர்யாவும் நடித்துள்ளனர். 

 

கடந்த வெள்ளி நிலவரப்படி, ராக்கெட்ரி படம் தமிழில் 75 லட்சமும், இந்தியில் 90 லட்சமும், மலையாளத்தில் 4 லட்சமும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து விடுமுறை நாளான நேற்று இந்தியில் மட்டும் ராக்கெட்ரி திரைப்படம் 1.60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல தமிழில் தோராயமாக 1.28 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியில் ராக்கெட்ரி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதற்கு போட்டிப்படமாக வெளியிடப்பட்ட ஆதித்யா ராய் கபூரின் ராஷ்ட்ர கவாச் ஓம் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. 

Rashtra Kavach Om:Day 1 – Rs. 1.25 crDay 2 – Rs. 1.20 crTotal – Rs. 2.45 cr

Rocketry: The Nambi Effect:Day 1 – Rs. 75 lakhDay 2 – Rs. 1.25 crTotal – Rs. 2 cr