கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!

கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா 1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

Continues below advertisement

KPY பாலா:

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டவர் பாலா. அதன் மூலம் பிரபலமடைந்த இவரை ரசிகர்கள் KPY பாலா என்றே அழைக்கின்றனர். சின்னத்திரை மட்டும் இன்றி சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். நடிப்பு மட்டும் இன்றி பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். அண்மையில் கூட பெட்ரேல் பங்கில் வேலை செய்த இளைஞர் ஒருவருக்கு பைக் வாங்கி கொடுத்தார்.  

Continues below advertisement

நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து ஏழை விவசாயிகளுக்கு ட்ராக்டர் வாங்கி கொடுத்த இவர்  லாரன்ஸ் உடன் இணைந்து மேலும் பல உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தான் நடிகார் பாலா இப்போது ஒரு உதவியை செய்து இருக்கிறார். அதாவது நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதில் தனக்கு கை, கால் செயலிழந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தனக்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு பண வசதி இல்லை என்பதால் நடிகர்கள் தனக்கு உதவ வேண்டும் என்று அந்த வீடியோவில் வேண்டுகோள் வைத்திருந்தார். அந்த வீடியோவில்,”எனக்கு கை, கால்கள் செயல்படவில்லை. நடக்கவும் பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல போதுமான பண வசதி இல்லை. திரைத்துறையை சார்ந்தவர்கள், நடிகர் சங்கங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

1 லட்சம் உதவி:

இதனை பார்த்த நடிகர் சிம்பு வெங்கல் ராவிற்கு 2 லட்சம் ரூபாய் மருத்துவ உதவிக்கு பணம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகின. இச்சூழலில் தான் நடிகர் பாலா வெங்கல் ராவிற்கு ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி இருப்பதாக கூறியிருக்கிறார். 

இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 26) வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “எனக்கு மிகவும் பிடித்த நடிகர் வெங்கல் ராவ் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். அதனால் அவருக்கு என்னுடைய சொந்த பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளேன். அவரது அக்கவுண்ட் எண் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கிறது. அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் அந்த எண்ணுக்கு நீங்களும் பணம் அனுப்ப முடிந்தால் அனுப்புங்கள். அவர் மருத்துவ செலவிற்கு பயண்படுத்திக் கொள்வார்” என்று கூறியுள்ளார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola