விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கலில் 55 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு மீதான பரிசீலனை நேற்று முன்தினம் விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.


இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கலில் 55 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான திமுகவை சார்ந்த வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டன.


இந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் பழனி விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் மாதிரி வாக்கு பதிவு, வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியீடு மற்றும் சின்னம் ஒதுக்குதல் மற்றும் வாக்கு எண்ணிக்கை இடம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் கூட்டமானது நடைபெற்றது.


இறுதி வேட்பாளருக்கான பட்டியல் மாலை வெளியிடப்பட்டது. 3:30 மணி அளவில் வேட்பாளர்களுக்கு எந்த சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திமுக பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி இத்தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் பானை சின்னத்தில் வெற்றி பெற்றனர். அப்பொழுது அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றனர். தற்போது உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க சென்று இருக்க கூடிய சூழ்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் தற்பொழுது பானை சின்னம் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


இந்த நிலையில் பானை சின்னத்தை சுயேட்சை வேட்பாளர் யாரேனும் பெற்றால், திமுகவில் வாக்குகள் குறைய வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது வேட்பாளர் இறுதி பட்டியலும் சின்னம் ஒதுக்கீடு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீவிர ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது வேட்பாளர் மத்தியில் அதற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.