பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் கிஷோர். அன்றிலிருந்து ஒரு சிறந்த குண்சித்திர நடிகராக தமிழ் சிமாவில் விளங்குகிறார்.  பொல்லாதவனுக்கு அடுத்த படியாக தொடர்ந்து ஆடுகளம், தோரணை, வெண்ணிலா கபடி குழு, வடசென்னை போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். ஹரி தாஸ் திரைப்படம் மூலமாக சிறந்த நடிகர் என நிரூபித்தார்.


கிஷோர் சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் அவர் நடித்த படங்கள் பற்றியும் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் பகிர்ந்துள்ளார். அதை இங்கே பார்க்கலாம்....


கேள்வி: பிளட்மணி (blood money) ஒரு உண்மையான சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த படத்துல நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?


கிஷோர்: ஒரு உண்மை சம்பவத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்ததே ரொம்ப பெரிய விஷயம். இது நிஜமாவே நடந்துருக்கு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நான் நடிச்ச ஒரு சிறந்த படம் இது.





 


கேள்வி: நீங்க நடித்ததில் உங்களுக்கு ரொம்ப பிடித்த படம் மற்றும் கேரக்டர் என்ன? 


பதில்: எல்லா படமே  பிடிக்கும். கதை பிடிச்சாதானே நடிக்கவே போறோம். ஒரு படம் சொல்லனும்னா ஹரிதாஸ் என் மனதுக்கு நேருக்மான ஒரு படம்.


கேள்வி: நீங்க பொல்லாதவன் படத்துல தனுஷ் கூட நடிச்சிருந்தீங்க.. ஒரு லாங் கேப்க்கு அப்புறம் வடசென்னையில் தனுஷ் கூட பண்ணிங்க. தனுஷ் எப்படி மாறியிருந்தார்? 


கிஷோர்: ஒரு மாற்றமும் தெரியல, ரொம்ப ஜாலியான நபர். அப்போ எப்படி இயல்பா இருந்தாரோ அப்படியே இருந்தார். 


கேள்வி: கேஜிஎப் படத்துக்கு அப்புறம் சவுத் இந்திய சினிமா மற்றும் நார்த் இந்திய சினிமா சண்டை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க ‌ ‌


கிஷோர்: எனக்கு புரியல. ஏன் இந்த சண்டை போடுறாங்ன்னு. எல்லா மொழியிலும் தான் நல்ல படம் வருது. என்னோட பார்வையில் இது ஒரு தேவையில்லாத சண்டை தான். படம் நல்லா இருக்கா பார்த்து ரசிச்சிட்டு போங்க அவளோ தான்





 


  கேள்வி: பொன்னியின் செல்வன் படத்துல நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க. படத்துல நீங்க யார் கூட நிறைய காட்சில வருவிங்க


பதில்: பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவோட கனவு. ஒரு வழியா பல தடங்கலை தாண்டி படம் வரப் போகுது. இதுல நடிச்சிருக்குறதே ரொம்ப பெருமையா இருக்கு. படத்துல நான் வர காட்சிகள் பெரும்பாலும் விக்ரம் சார் மற்றும் ஐஸ்வர்யா மேடம் கூட தான் இருக்கும். ஐஸ்வர்யா ராய் மேடம் பற்றி சொல்னும்னா ரொம்ப பொலைட்டான நபர் . விக்ரம் சாரை நான் செட்ல தான் முதல் முறை பார்த்தேன். ஆனால் ரொம்ப நல்லா பேசுனாரு. பல வருடம் பழகுன மாதிரி ரொம்பவே சகஜமாக நபர்.