இன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தியாகம் மற்றும் ஈகை பண்பை கொண்டாடும் விதமாக இந்நாள் பின்பற்றப்படுகிறது.


நண்பர்கள், குடும்பத்தினருக்கு வாழ்த்து செய்திகள் இங்கே!





இந்த நன்னாளில் அல்லா உங்களுடன் இருப்பார். உங்கள் குடும்பத்தில் அமைதி நிலவட்டும்.


தியாக திருநாள் வாழ்த்துகள்; உங்கள் வளமான வாழ்க்கைக்கு அல்லாவின் அருள் என்றும் உங்களுடன் இருக்கும்.



இனிய பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள்; இந்த இனிய நாளில் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் Eid-ul-Adha வாழ்த்துகள். ஆரோக்கியமும் வளமும் பெருகட்டும்.




இனிய பக்ரீத் வாழ்த்துகள்; இந்த இனிய நாளில் அல்லா உங்களுக்கு எல்லாமும் வழங்கட்டும்.



இருப்பதைப் பிறருடன் பகிந்து வாழ் என்று அல்லா காட்டிய வழியில் பயணிக்க இந்த நாளில் உறுதி ஏற்போம். இனிய பக்ரீத் வாழ்த்துகள்.

 

 



உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பக்ரீத் வாழ்த்துகள்; இறைவன் உங்களின் வாழ்க்கை பயணத்தில் எப்போதும் துணையிருப்பார். 
Eid Mubarak!

 

இனிவரும் காலங்கள் வளமுடன் இருக்க வாழ்த்துகள். எல்லாமும் பெற்று இன்புற்று இருக்க பிரார்த்தனைகள்!



 இந்த ஈகைத் திருநாள் உங்களது வாழ்வில் வசந்தத்தை கொண்டு வரட்டும். Bakrid Mubarak!

 

 

தியாக திருநாளாம் பக்ரீத் அன்று நம் துன்பங்கள் நீங்கி, ஒளிமிகுந்த நாட்கள் தொடரட்டும்! இனிய பக்ரீத் வாழ்த்துகள்!

 



 


இந்த ஆண்டின் இரண்டாவது ஈத் பெருநாளான ஈத்-உல்-அதா / ஈத்-உல்-ஜுஹா / பக்ரா-ஈத் எனப்படும் பக்ரித் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.


 


ஈகைத் திருநாள்




ஈத்-உல்-ஜுஹா என்பது வரலாற்றில் இறைத்தூதர் நபி இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூறும் ஒரு பண்டிகை ஆகும். இதனால் இந்த நாள் ஈகைத் திருநாள் அல்லது தியாகத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது.


பண்டிகை என்று பொருள்படும் ஈத் எனும் அரபு வார்த்தை மற்றும் தியாகம் என்று பொருள்படும் ஜூஹா எனும் வார்த்தைகள் இணைந்து ஈத் அல் ஜூஹா எனும் வார்த்தைப் பிரயோகம் உருவாகி உள்ளது.


இஸ்லாமிய மாதமான ஜுல் ஹிஜ்ஜாவின் 10ஆவது நாளில் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை, சுமார் மூன்று நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது.


அதன்படி, இந்த ஆண்டு ஈத்-உல்-ஜுஹா கொண்டாட்டங்கள் நாளை (ஜூலை 10)  தொடங்க உள்ளது. இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளின்படி, இப்ராஹிம் நபி அல்லாவின் மீதுள்ள வலுவான நம்பிக்கையால் செய்த தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


நபி இப்ராஹிமின் தியாகம்






இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம், சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார்.


நெடுநாள்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். 


இப்ராஹிமின் மகன் இஸ்மாயீல் பால்ய வயதை அடைந்தபோது அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள் இப்ராஹிம்மின் கனவின் மூலம் கட்டளையிடுகிறார். இதைப்பற்றி  மகனிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியோடு பலியிட முயன்றபோது சிஃப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனைத் தடுத்து மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்து இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை பலியிடுமாறு இப்ராஹிமுக்கு கட்டளையிட்டார் என நம்பப்படுகிறது.


மேற்கூரிய இந்தச் சம்பவத்தின் அடிப்படையிலேயே  தியாகத் திருநாள் கொண்டாடப்படுகின்றது.


பக்ரீத் கொண்டாட்டம்





பக்ரீத் தினத்தன்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சூரியன் முழுமையாக உதித்த பிறகே மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடத்துகிறார்கள். மதியத் தொழுகை நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். தொழுகைக்குப் பிறகு, இஸ்லாமியர்கள் பிரசங்கங்களில் கலந்து கொள்கிறார்கள்.


சிறப்பு தொழுகைக்குப் பிறகு வீடு திரும்பும் மக்கள் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு ஆடுகளை குர்பானியாகக் கொடுத்து அதனைப் பகிர்ந்தளித்து உணர்கிறார்கள்.