தொடர்ந்து பரிணமித்து வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப இன்சூரன்ஸ் பாலிசிகளை வாகன உரிமையாளர்கள் தங்கள் ஓட்டுநர் நடத்தை முறை, வாகனங்களின் பராமரிப்பு, மைலேஜ் மற்றும் வாகனப் பயன்பாட்டு முறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களின் வாகனங்களுக்கு குறைந்த தொகையில் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இதை IRDAI "ஓட்டுவதற்கேற்ப பணம் செலுத்துதல்" மற்றும் "ஓட்டுவதை பொறுத்து பணம் செலுத்துதல்" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.




Insurance Regulatory and Development Authority of India (IRDAI) இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அனுமதித்துள்ளது. இதன்படி, புதிய கார் காப்பீட்டுத் திட்டத்தின்படி, காரின் பயன்பாடு மற்றும் ஓட்டுநர் நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையில் மாற்றங்கள் இருக்கும்.


இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோட்டார் இன்சூரன்ஸ் தொடர்ந்து பரிணமித்து வருவதாகவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப இன்சூரன்ஸ் பாலிசிகளை எளிதாக்குவதற்காக, பொது காப்பீட்டாளர்கள் "ஓட்டுவதற்கேற்ப பணம் செலுத்துதல்" மற்றும் "ஓட்டுவதை பொறுத்து பணம் செலுத்துதல்" போன்ற மாற்றங்களை கொண்டு வர அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், சொந்த பயன்பாட்டு கார்கள், பொது பயன்பாட்டு கார்கள், லாரிகள் மற்றும் வேன்களுக்கும் பொருந்தும். இந்த சுற்றறிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது.




இந்த புதிய திட்டத்தின்படி, ஓட்டுநர் எவ்வாறு வண்டியை ஓட்டுகிறார், வேகமாக ஓட்டுகிறாரா, சாலைவிதிகளை சரியாக பின்பற்றுகிறாரா போன்றவற்றை கொண்டும், வாகனத்தின் பயன்பாட்டை பொறுத்தும் இன்சூரன்ஸ் தொகை செலுத்தினால் போதும். வாகனத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் பட்சத்தில் இன்சூரன்ஸ் தொகை அதிகமாகவும், பயன்பாடு குறைவாக இருக்கும் பட்சத்தில் இன்சூரன்ஸ் தொகை குறைவாகவும் இருக்கும்.


மேலும் படிக்க : Royal Enfield Shotgun:"போர் கண்ட சிங்கம்.." ராயல் என்ஃபீல்ட் ஷாட்கன் 650 விரைவில் சந்தைக்கு வருகிறது.. வைரலாகும் புகைப்படங்கள்


மேலும் படிக்க : Maruti Suzuki Jimny : தயங்கும் மஹிந்த்ரா..! இறங்கி அடிக்கும் மாருதி..! ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


Car loan Information:

Calculate Car Loan EMI