இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ்  நடிக்கும் "தருணம்"  திரைப்பட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


ஸென் ஸ்டுயோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ‘தருணம்’ படம் உருவாகி வருகிறது.  "தேஜாவு" படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் இந்த படத்தில், ‘முதல் நீ முடிவும் நீ’ கிஷன் தாஸ் மற்றும் நடிகை ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது, இந்நிலையில் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் படமான தேஜாவு படத்தில் திரில்லர் கதையில் கலக்கிய இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இப்படத்தில் மனம் வருடும், மிக மென்மையான காதல் கதை மூலம் ரசிகர்களை கையில் எடுத்துள்ளார். 


ஏற்கனவே படத்தின் பூஜையின் போது, ‘இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலிலிருந்தே இந்தப்படத்தைப் பெரிய படமாக ட்ரீட் செய்யலாம்  என சொன்னார். நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி.சினிமாவில் நான் இன்னும் புதுமுகம் தான்’ என படம் தொடர்பாக நடிகர் கிஷன் தாஸ் தெரிவித்திருந்தார். இந்தப்படத்தில் இதுவரை செய்யாத கதாப்பாத்திரம். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என நடிகை ஸ்மிருதி வெங்கட் கூறியிருந்தார். தருணம் படத்தின் கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். இது கண்டிப்பாக அனைவருக்கும் மைல்கல் படமாக இருக்கும் என  இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.