Kishen Das: உயிர்த்தோழியுடன் நிச்சயதார்த்தம்.. திருமண செய்தி சொன்ன முதல் நீ முடிவும் நீ பட நடிகர் கிஷன் தாஸ்!

Kishen Das Engagement: 2016ஆம் ஆண்டு முதல் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வரும் கிஷன் தாஸ், தொடர்ந்து ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

Continues below advertisement

‘முதல் நீ முடிவும் நீ’ திரைப்பட நடிகரும், பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளருமான கிஷன் தாஸூக்கு (Kishen Das) நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

Continues below advertisement

வளர்ந்து வரும் நடிகர்

தமிழ் சினிமாவில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கிஷன் தாஸ். 2016ஆம் ஆண்டு முதல் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வரும் கிஷன் தாஸ், தொடர்ந்து ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடித்த நிலையில், பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

சென்ற ஆண்டு இவர் சிங்க், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில், தருணம், ஈரப்பதம் காற்று மழை ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

பிரபல சீரியல் நடிகையின் மகன்

90களின் பிரபல சீரியல் நடிகையான பிருந்தா தேவியின் மகனான கிஷன் தாஸ், தன் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இந்நிலையில் தன் உயிர் தோழியுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளதாக தற்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

“அவள் நோ சொல்லவில்லை. நிஜ வாழ்க்கையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஒளிபரப்பாகி உள்ளது. என் உயிர்த்தோழியுடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது”  என கிஷன் தாஸ் உணர்வுப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளதுடன், தன் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

 

அடுத்தடுத்து திருமணம்

இந்நிலையில் கிஷன் தாஸூக்கு நடிகைகள் மஞ்சிமா மோகன், கௌரி கிஷன், ரெஜினா ஆத்மிகா என பல நடிகர், நடிகைகளும் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர். மேலும்,  இணையவாசிகளும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் தான் இவரது முதல் நீ முடிவும் நீ பட சக நடிகையான மீத்தா ரகுநாத்துக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. மணிகண்டனுடன் நடித்த குட் நைட் படத்தின் மூலம் இவர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Siddharth Aditi Rao Marriage: நடிகர் சித்தார்த் - நடிகை அதிதி தெலங்கானாவில் திருமணம்? பரவும் தகவல்!

Santhanam Friends: முதலில் சேது இப்போது சேஷூ... ஒரே நாளில் உயிரிழந்த சந்தானத்தின் 2 நெருங்கிய நண்பர்கள்!

Continues below advertisement
Sponsored Links by Taboola